அரசுக் கட்டுப்பாட்டில் உள்ள குறைந்தபட்சம் 14 சங்கங்களை 2013 ஆம் ஆண்டு நிறுவனங்கள் சட்டத்தின் 8வது பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களாக மாற்றும் பணியில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது.
இது அவற்றின் செயல்பாடுகளை மேம்படுத்துவதையும், பல்வேறு தணிக்கை வழி முறைகள் மூலமான மதிப்பாய்விற்கு அவற்றை உட்படச் செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சங்கங்கள் பெரும்பாலும் வரி பணத்தில் செயல்பட்டு வருகின்றன, ஆனாலும் அவை “கருவூல அமைப்பின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டு செயல்படுகின்றன” மற்றும் “சட்டமன்ற மதிப்பாய்விற்கு அப்பாற்பட்டு உள்ளன”.
இந்தப் பதிவு மாற்றத்துடன், இந்த நிறுவனங்கள் இனி தலைமை கணக்குத் தணிக்கை (கூடுதல் தணிக்கை), சட்டப்பூர்வத் தணிக்கை, உள்ளக தணிக்கை, வரி தணிக்கை, செயலகத் தணிக்கை மற்றும் நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் தேவையான பிற சரி பார்ப்பு வழிமுறைகளுக்கு உட்படுத்தப் படும்.