8வது பொருளாதாரக் கணக்கெடுப்பினை எளிதாக்குவதற்காக வேண்டி தமிழ்நாடு அரசு மாநில மற்றும் மாவட்ட அளவிலான குழுக்களை அமைத்துள்ளது.
இது ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது.
பொருளாதாரக் கணக்கெடுப்பு ஆனது, ஒரு மாநிலத்திற்குள் உள்ள அனைத்து வணிக நிறுவனங்களின் முழுமையான எண்ணிக்கையை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
நாடு முழுவதுமான 7வது பொருளாதாரக் கணக்கெடுப்பு ஆனது 2019 ஆம் ஆண்டில் நடத்தப்பட்டாலும் மேற்கு வங்காளம் பங்கேற்கவில்லை.
6வது பொருளாதாரக் கணக்கெடுப்பின் அகில இந்திய அறிக்கையின்படி (2013-14 ஆம் ஆண்டிற்கு இடையில் சேகரிக்கப்பட்டத் தரவுகள்), தமிழ்நாட்டில் 8.60% நிறுவனங்கள் இருந்தது என்பதோடு இது நாட்டின் மொத்த நிறுவனங்களின் எண்ணிக்கையில் நான்காவது இடத்தில் உள்ளது.
நாட்டின் மொத்த வேலைவாய்ப்பில் தமிழ்நாடு 8.91% பங்குடன், நாட்டின் மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களில் நான்காவது இடத்தில் உள்ளது.
நாட்டில் அதிகபட்சமாக பெரிய நிறுவனங்கள் தமிழ்நாட்டில் (13.81%) பதிவாகியுள்ளன.
தமிழ்நாடானது, பெண் தொழில்முனைவோரின் தலைமையின் கீழ் உள்ள வணிக நிறுவனங்களின் எண்ணிக்கையில் மிகப்பெரிய பங்கினை (13.51%) கொண்டுள்ளது.
அதைத் தொடர்ந்து கேரளா (11.35%), ஆந்திரப் பிரதேசம் (10.56%), மேற்கு வங்காளம் (10.33%) மற்றும் மகாராஷ்டிரா (8.25%) உள்ளன.