மத்தியத் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் ஆனது புது டெல்லியில் நடைபெற்ற பிராந்தியச் சமூக வானொலி சம்மேளனத்தின் போது இந்த விருதுகளை வழங்கியது.
பின்வரும் 4 பிரிவுகளில் இந்த விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
கருத்துரு சார்ந்த விருதுகள்
மிகவும் புத்தாக்கமிக்க சமூக ஈடுபாடு விருதுகள்
உள்ளூர்க் கலாச்சாரத்தினை ஊக்குவித்தலுக்கான விருதுகள்
நிலைத் தன்மை மிக்க நவீன விருதுகள்
தமிழ்நாடு மாநிலத்தின் மதுரை மாவட்டத்தில் இயக்கப்படும் வயலக வானொலி, நிலைத் தன்மை மிக்க நவீன விருதுகள் பிரிவில் இரண்டாம் பரிசு பெற்றது.
இந்த விருதுகள் சமூக ஒளிபரப்பு மற்றும் உள்ளூர் மேம்பாட்டிற்கான சிறந்தப் பங்களிப்புகளை அங்கீகரிக்கிறன.
ஒலிபரப்பில் மூன்றாம் நிலையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த சமூக வானொலி ஆனது, சமூகங்களுக்கு அதிகாரம் அளித்து கலாச்சாரப் பாரம்பரியத்தை மிகவும் நன்கு பாதுகாக்கிறது.
சமீபத்திய ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க அதிகரிப்புடன், இந்தியாவில் தற்போது 449 சமூக வானொலி நிலையங்கள் உள்ளன.