TNPSC Thervupettagam

9வது ஆசிய குளிர்கால விளையாட்டுப் போட்டிகள் 2025

February 18 , 2025 5 days 55 0
  • 9வது ஆசிய குளிர்கால விளையாட்டுப் போட்டிகள் சீனாவின் ஹார்பின் எனுமிடத்தில் நடைபெற்றன.
  • இப்போட்டிகளுக்கான அதிகாரப்பூர்வச் சின்னங்கள் ஆனது, "பின்பின்" மற்றும் "நினி" (புலிகள்), மற்றும் அந்தப் போட்டிக்கான ஒரு முழக்கமாக "Dream of Winter, Love among Asia" வெளியிடப்பட்டது.
  • சீனா 85 பதக்கங்களுடன் (32 தங்கம், 27 வெள்ளி, 26 வெண்கலம்) பதக்கப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது.
  • தென்கொரியக் குடியரசு 45 பதக்கங்களுடன் (16 தங்கம், 15 வெள்ளி, 14 வெண்கலம்) இரண்டாவது இடத்தைப் பிடித்தது.
  • ஜப்பான் 37 பதக்கங்களுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்தது.
  • கஜகஸ்தான் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகியவை இதன் முதல் ஐந்து இடங்களில் இடம் பெற்றன.
  • இந்தியா 59 விளையாட்டு வீரர்களைக் கொண்ட மிகப்பெரியக் குழுவை அனுப்பியது,  ஆனால் எந்த பதக்கங்களையும் வெல்லவில்லை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்