9வது ஆசிய நாடுகளின் எரிசக்தி அமைச்சர்கள் வட்டமேசை (AMER9) மாநாடு
March 8 , 2023 630 days 331 0
பெங்களுருவில் நடைபெற்ற சர்வதேச எரிசக்தி மன்றத்துடன் (IEF) சேர்த்து 9வது ஆசிய நாடுகளின் எரிசக்தி அமைச்சர்கள் வட்டமேசை (AMER9) மாநாட்டினையும் இந்திய அரசு நடத்துகிறது.
இந்த நிகழ்வின் கருத்துரு, "எரிசக்தி பாதுகாப்பு, உள்ளார்ந்த வளர்ச்சி மற்றும் எரிசக்தி வள மாற்றங்களுக்கான புதிய பாதைகளை உருவாக்குதல்" என்பதாகும்.
2030 ஆம் ஆண்டிற்குள் தனது 40% எரிசக்தித் தேவையினை, புதைபடிவம் சாரா எரிசக்தி மூலங்களிலிருந்து பெற வேண்டும் என்ற தனது உறுதிப்பாட்டை 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திலேயே இந்தியா பூர்த்தி செய்துள்ளது.
சர்வதேச எரிசக்தி மன்றம் (IEF) ஆனது 71 உறுப்பினர் நாடுகளைக் கொண்ட உலகின் மிகப்பெரிய எரிசக்தி அமைப்பாகும்.
இதன் உறுப்பினர் நாடுகள், உலக எரிசக்திச் சந்தையில் 90 சதவீதத்தினைக் கொண்டு உள்ளன.