TNPSC Thervupettagam

9வது பாக்கே பாகா இருவாட்சி திருவிழா

January 21 , 2024 180 days 211 0
  • இந்தத் திருவிழாவானது, வனவிலங்குப் பாதுகாப்பில் மிக கவனம் செலுத்துவதோடு, இருவாச்சி பறவைகளின் பாதுகாப்பிற்குக் குறிப்பிட்ட முக்கியத்துவம் அளிக்கிறது.
  • இந்தப் பறவையின் நான்கு வகைகள்- தாடை பட்டை கொண்ட இருவாச்சி, மலை இருவாச்சி, ஓரியண்டல் கருப்பு வெள்ளை இருவாச்சி மற்றும் அழிந்து வரும் செம்பழுப்பு கழுத்து கொண்ட இருவாச்சி – ஆகியவை அருணாச்சலப் பிரதேசத்தின் பாக்கே புலிகள் வளங்காப்பகத்தில் (PTR) காணப்படுகின்றன.
  • அருணாச்சலப் பிரதேசத்தின் மிகப் பெரிய பழங்குடியினக் குழுவான நிஷியின் இருப்பிடமாகவும் இப்பகுதி உள்ளது.
  • பாக்கே புலிகள் வளங்காப்பகத்தில் இருவாச்சி பறவைகளைப் பாதுகாப்பதில் நிஷி சமூகத்தினர் ஆற்றியப் பங்கை அங்கீகரிப்பதே இந்தத் திருவிழாவின் நோக்கமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்