இந்தத் திருவிழாவானது, வனவிலங்குப் பாதுகாப்பில் மிக கவனம் செலுத்துவதோடு, இருவாச்சி பறவைகளின் பாதுகாப்பிற்குக் குறிப்பிட்ட முக்கியத்துவம் அளிக்கிறது.
இந்தப் பறவையின் நான்கு வகைகள்- தாடை பட்டை கொண்ட இருவாச்சி, மலை இருவாச்சி, ஓரியண்டல் கருப்பு வெள்ளை இருவாச்சி மற்றும் அழிந்து வரும் செம்பழுப்பு கழுத்து கொண்ட இருவாச்சி – ஆகியவை அருணாச்சலப் பிரதேசத்தின் பாக்கே புலிகள் வளங்காப்பகத்தில் (PTR) காணப்படுகின்றன.
அருணாச்சலப் பிரதேசத்தின் மிகப் பெரிய பழங்குடியினக் குழுவான நிஷியின் இருப்பிடமாகவும் இப்பகுதி உள்ளது.
பாக்கே புலிகள் வளங்காப்பகத்தில் இருவாச்சி பறவைகளைப் பாதுகாப்பதில் நிஷி சமூகத்தினர் ஆற்றியப் பங்கை அங்கீகரிப்பதே இந்தத் திருவிழாவின் நோக்கமாகும்.