TNPSC Thervupettagam

9வது NIRF தரவரிசை 2024

August 16 , 2024 102 days 157 0
  • சென்னையின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம் ஆனது, 2019 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து ஆறாவது முறையாக நாட்டின் சிறந்த கல்வி நிறுவனமாக விளங்கி வருகிறது.
  • பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் கல்வி நிறுவனம் ஆனது, பல்கலைக் கழகங்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழும் 2016 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் முறையே முதல் இரு இடங்களையும் தக்க வைத்துக் கொண்டுள்ளது.
  • கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கூடுதலாக மூன்று பிரிவுகளோடுச் சேர்த்து 16 பிரிவுகளில் தரவரிசைகள் வழங்கப்பட்டன.
  • திறந்த நிலைப் பல்கலைக்கழகங்கள், திறன் சார் பல்கலைக்கழகங்கள் மற்றும் மாநிலப் பொதுப் பல்கலைக்கழகங்கள் ஆகியவை இந்த மூன்று புதிய வகைகளாகும்.
  • அகமதாபாத்தில் உள்ள இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனம் ஆனது 2020 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக சிறந்த மேலாண்மை கல்வி நிறுவனமாக திகழ்கிறது.
  • தொடர்ந்து ஏழாவது ஆண்டாக முதலிடத்தில் உள்ள புது டெல்லியின் அகில இந்திய மருத்துவ அறிவியல் கல்வி நிறுவனம் (AIIMS) ஆனது மருத்துவ அறிவியல் படிப்பிற்குத் தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த கல்வி நிறுவனமாகும்.
  • புது டெல்லியில் உள்ள ஜாமியா ஹம்தார்ட், மருந்தியல் கல்விக்கான சிறந்த கல்லூரி ஆகும்.
  • சென்னையின் சவீதா மருத்துவம் மற்றும் தொழில்நுட்ப அறிவியல் கல்வி நிறுவனம் ஆனது பல் மருத்துவப் படிப்பிற்கான சிறந்த கல்லூரியாகும்.
  • மும்பையின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகமானது, சிறந்த ‘புத்தாக்கம் மிக்க கல்வி நிறுவனம்’ ஆகவும், அதைத் தொடர்ந்து சென்னையின் இந்தியத் தொழில் நுட்பக் கல்விக் கழகமும், டெல்லியின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகமும் இடம் பெற்றுள்ளன.
  • பொறியியலில் சென்னை IIT நிறுவனத்தினைத் தொடர்ந்து டெல்லியின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம் மற்றும் மும்பையின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம் ஆகியவை இடம் பெற்றுள்ளன.
  • நிர்வாகக் கல்வியில் அகமதாபாத்தின் இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனத்தினை அடுத்து பெங்களூருவின் அகமதாபாத்தின் இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனம் மற்றும் கோழிக்கோட்டில் உள்ள இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனம் ஆகியவை இடம் பெற்றுள்ளன.
  • ரூர்க்கியின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம் ஆனது தொடர்ந்து நான்காவது ஆண்டாக கட்டிடக்கலை மற்றும் திட்டமிடல் பிரிவில் தனது முதல் இடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.
  • பெங்களூருவில் உள்ள இந்தியா பல்கலைக்கழகத்தின் தேசிய சட்டக் கல்லூரியானது தொடர்ந்து ஏழாவது ஆண்டாக சிறந்த சட்டக் கல்லூரியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
  • புது டெல்லியில் உள்ள இந்திய வேளாண்மை ஆராய்ச்சி நிறுவனமானது வேளாண்மை மற்றும் அதைச் சார்ந்த துறை படிப்புகளைக் கற்க சிறந்த நிறுவனமாக விளங்குகிறது.
  • புது டெல்லியின் இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகம் (IGNOU) ஆனது சிறந்த திறந்தநிலைப் பல்கலைக்கழகம் ஆக விளங்குகிறது.
  • புனே நகரில் உள்ள சிம்பயோசிஸ் திறன் சார் மற்றும் தொழில் முறைக் கல்விப் பல்கலைக் கழகமானது, திறன் சார் பல்கலைக்கழகங்கள் பிரிவில் சிறந்த நிறுவனம் ஆக உருவெடுத்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்