TNPSC Thervupettagam
September 6 , 2023 318 days 226 0
  • சீனா வெளியிட்ட புதிய வரைபடத்தை நிராகரிக்கும் விதமாக இந்தியா, மலேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளுடன் வியட்நாம் நாடும் இணைந்துள்ளது.
  • சீனா வெளியிட்ட வரைபடம் மற்றும் சீனாவின் 'ஒன்பது கோடு எல்லை' சார்ந்த உரிமை கோரல் ஆனது வியட்நாமின் இறையாண்மையை மீறுவதாக உள்ளது.
  • அருணாச்சலப் பிரதேசம் மற்றும் அக்சாய் சின் மீதான சீனாவின் உரிமை கோரலுக்கு இந்தியா பெரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
  • புருனே, மலேசியா, பிலிப்பைன்ஸ் மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகள் தென் சீனக் கடல் மீது உரிமை கொண்டாடுகின்றன.
  • தென் சீனக் கடலில் 90% பகுதியினை சீனா உரிமை கோருகிறது.
  • ‘ஒன்பது கோடு எல்லை' என்பது உலக வரைபடத்தில், தென் சீனக் கடல் பிராந்தியத்தில் தனது உரிமை கோரல்களை உறுதிப்படுத்துவதற்காக வேண்டி சீனா பயன்படுத்தும் வரலாற்று எல்லைக் கோடு ஆகும்.
  • 2016 ஆம் ஆண்டின் நடுவர் மன்றத் தீர்ப்பானது ஒன்பது கோடு எல்லை உரிமைக் கோரலை செல்லாததாக்கியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்