9 நாடுகளுக்கு சர்வதேச பளுதூக்கல் போட்டிகளில் பங்கேற்கத் தடை
October 2 , 2017 2674 days 949 0
கடந்த 2008 மற்றும் 2012 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற 9 நாடுகளின் வீரர்/வீராங்கனைகளின் மாதிரிகள் மறுபரிசோதனை செய்யப்பட்டது.
இதில் அவர்கள் ஊக்கமருந்து பயன்படுத்தியமை உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து சர்வதேச பளுதூக்கல் போட்டிகளில் அந்நாடுகள் பங்கேற்க சர்வதேச பளுதூக்கல் சம்மேளனம் (International Weightlifting Federation- IWF) ஓராண்டு காலத்திற்கு தடை விதித்துள்ளது.
இதனால் ரஷியா, சீனா, ஆர்மேனியா , அஜர்பைஜான், பெலாரஸ், மால்டோவா, கஜகஸ்தான், துருக்கி, உக்ரைன் உள்ளிட்ட இந்நாடுகள் கலிபோர்னியாவில் நடைபெறவுள்ள பளுதூக்குதல் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பினை இழந்துள்ளன.
இதனால் சீனா 2018 ஆம் ஆண்டு நடைபெற உள்ள ஆசிய பளுதூக்குதல் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பினையும் இழந்துள்ளது.
ஏற்கனவே 2016 ரியோ ஒலிம்பிக் போட்டியின் பளுதூக்குதலில் ரஷ்யா பங்கேற்க தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.