TNPSC Thervupettagam

9 நாடுகளுக்கு சர்வதேச பளுதூக்கல் போட்டிகளில் பங்கேற்கத் தடை

October 2 , 2017 2481 days 822 0
  • கடந்த 2008 மற்றும் 2012 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற 9 நாடுகளின்  வீரர்/வீராங்கனைகளின் மாதிரிகள் மறுபரிசோதனை செய்யப்பட்டது.
  • இதில் அவர்கள் ஊக்கமருந்து பயன்படுத்தியமை உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து சர்வதேச பளுதூக்கல் போட்டிகளில் அந்நாடுகள் பங்கேற்க சர்வதேச பளுதூக்கல் சம்மேளனம் (International Weightlifting Federation- IWF)  ஓராண்டு  காலத்திற்கு தடை விதித்துள்ளது.
  • இதனால் ரஷியா, சீனா, ஆர்மேனியா , அஜர்பைஜான், பெலாரஸ், மால்டோவா, கஜகஸ்தான், துருக்கி, உக்ரைன் உள்ளிட்ட இந்நாடுகள் கலிபோர்னியாவில் நடைபெறவுள்ள பளுதூக்குதல் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பினை இழந்துள்ளன.
  • இதனால் சீனா 2018  ஆம் ஆண்டு நடைபெற உள்ள ஆசிய பளுதூக்குதல் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பினையும் இழந்துள்ளது.
  • ஏற்கனவே 2016 ரியோ ஒலிம்பிக் போட்டியின் பளுதூக்குதலில் ரஷ்யா பங்கேற்க தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்