அர்ஜென்டினாவைச் சேர்ந்த தொல்லுயிரியல் ஆராய்ச்சியாளர்கள் புதிய நடுத்தர அளவிலான தாவர உண்ணி டைனோசரை கண்டறிந்ததாக அறிவித்துள்ளனர்.
இது வேகமாக ஓடக் கூடியதாகவும், 90 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இன்றைய படகோனியாவில் கிரெட்டேசியஸ் காலத்தின் பிற்பகுதியில் வாழ்ந்ததாகவும் கருதப் படுகிறது.
சாகிசரஸ் நெகுல் என்றப் பெயரிடப்பட்ட இந்த விலங்கு பியூப்லோ பிளாங்கோ என்ற இயற்கைக் காப்பகத்தில் கண்டறியப்பட்டது.
இந்த மிகப்பெரிய சாகிசரஸ் 2.5 அல்லது 3 மீட்டர் நீளமும், 70 சென்டிமீட்டர் உயரமும் (8 முதல் 10 அடி நீளம் மற்றும் 27 அங்குல உயரம்) கொண்டது.