தெலங்கானாவின் மகபூப்நகர் மாவட்டத்தின் ஜாட்செர்லா மண்டலத்தில், கல்யாண சாளுக்கியர் வம்சத்தினைச் சேர்ந்த 900 ஆண்டுகள் பழமையான கன்னட மொழியில் எழுதப்பட்ட கல்வெட்டு ஆனது கண்டறியப்பட்டுள்ளது.
இது கி.பி. 1134 ஆம் ஆண்டு ஜூன் 8 ஆம் தேதியன்று (வெள்ளிக்கிழமை) கல்யாண சாளுக்கிய வம்சத்தின் பேரரசர் ‘பூலோகமல்லர்’ என்றழைக்கப் படும் மூன்றாம் சோமேஸ்வரரின் மகன் மூன்றாம் தைலபாவின் சுங்க அதிகாரிகளால் பொறிக்கப் பட்ட கல்வெட்டாகும்.
இது சோமநாத கடவுளின் அணையா தீபம் மற்றும் தூபத்தின் மீது விதிக்கப்பட்ட வட்டரவுலா மற்றும் ஹெஜ்ஜுங்கா எனப்படும் சுங்க வரிகளை ரத்து செய்வது குறித்த பதிவுகளைக் கொண்டுள்ளது.