TNPSC Thervupettagam

91வது இன்டர்போல் பொதுச் சபை

December 13 , 2023 220 days 195 0
  • இன்டர்போலின் (சர்வதேசக் குற்றவியல் காவல் அமைப்பு) 91வது பொதுச் சபையானது வியன்னா நகரில் நடைபெற்றது.
  • இது 1923 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட சர்வதேசக் குற்றவியல் காவல் அமைப்பின் (இன்டர்போல்) நூற்றாண்டு விழாவையும் கொண்டாடியது.
  • மத்தியப் புலனாய்வு அமைப்பு (CBI) மற்றும் தேசியப் புலனாய்வு முகமை (NIA) ஆகியவற்றின் பிரதிநிதிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
  • இன்டர்போலின் ‘தொலைநோக்குத் திட்டம் 2030’ என்பதினை ஏற்பதற்கு இந்தியாவும் ஆதரவு அளித்தது.
  • இந்தியா 1949 ஆம் ஆண்டில் இன்டர்போல் அமைப்பில் சேர்ந்தது என்பதோடு, மேலும் அந்த அமைப்பின் தீவிரச் செயல்பாட்டு உறுப்பினராகவும் இருந்து வருகிறது.
  • இந்தியா இதற்கு இரண்டு பொதுச் சபைகளை நடத்தியுள்ளது.
  • கடந்த ஆண்டு, 168 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்ற 90வது பொதுச் சபையை இந்தியா நடத்தியது.
  • 1923 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப் பட்ட இன்டர்போல் அமைப்பின் தலைமையகம் பிரான்சின் லியோன் என்ற இடத்தில் அமைந்து உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்