'பாரதிய வாயு சேனா' என்றும் அழைக்கப்படும், இந்திய விமானப் படையானது 1932 ஆம் ஆண்டு அக்டோபர் 08 ஆ தேதியன்று பிரிட்டிஷ் பேரரசால் அதிகாரப்பூர்வமாக நிறுவப்பட்டது.
விமானப்படையானது ஐந்து நடவடிக்கை சார் மற்றும் இரண்டு செயல்பாட்டு சார் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
இந்திய விமானப் படையானது உலகின் நான்காவது பெரிய செயல்பாட்டு விமானப் படையாக உள்ளது.
இந்த ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, “Bhartiya Vayu Sena – Saksham, Sashakt, Atmanirbhar” என்பதாகும்.
இந்திய விமானப்படை (IAF) ஆனது இந்தத் தினத்தை நன்கு நினைவு கூறும் வகையில் அக்டோபர் 06 ஆம் தேதியன்று சென்னை மெரினா கடற்கரையில் மாபெரும் வானூர்தி சாகச நிகழ்ச்சியை நடத்தியது.
இந்த நிகழ்வில் 15 லட்சம் மக்கள் கலந்து கொண்டதுடன், விமான சாகச நிகழ்வில் அதிக அளவில் கலந்து கொண்டதற்காக இது லிம்கா சாதனை என்ற புத்தகத்தில் இடம் பிடித்தது.
இதற்கு முன்னதாக 21 ஆண்டுகளுக்கு முன்பு இத்தகைய நிகழ்ச்சி சிறிய அளவில் சென்னையில் நடைபெற்றது.