ரெஜினா ஹால், எமி ஸ்கூமர் மற்றும் வான்டா சைக்ஸ் ஆகியோர் இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினர்.
2011 ஆம் ஆண்டில் நடைபெற்ற 83வது விருது விழாவில் அனி ஹாத்வே மற்றும் ஜேம்ஸ் பிரான்கோ ஆகியோர் இணைந்து தொகுத்து வழங்கிய பிறகு, பல தொகுப்பாளர்கள் இந்த விருது வழங்கும் விழாவைத் தொகுத்து வழங்குவது இதுவே முதல்முறையாகும்.
இதில் நெட்ஃபிளிக்ஸ் நிறுவனத்தின் “The power of Dog” என்ற திரைப்படம் 12 பரிந்துரைகளுடன் முன்னணியிலுள்ளது.
இதனைத் தொடர்ந்து, அறிவியல் சார்ந்த புனைக்கதையான Dune எனும் திரைப்படம் உள்ளது.
இந்திய ஆவணப்படமான “Writing with Fire” என்ற படமும் சிறந்த ஆவணப்படம் என்ற பிரிவில் பரிந்துரைக்கப் பட்டுள்ளது.