TNPSC Thervupettagam

99942 அபோபிஸ் குறுங்கோள்

May 4 , 2019 1905 days 664 0
  • தற்பொழுது வரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள ஆபத்தை ஏற்படுத்தும் திறனுள்ள 2000 குறுங்கோள்களில் 99942 அபோபிஸ் குறுங்கோளும் ஒன்றாகும்.
  • இது 2004 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது.
  • இது பூமிக்கு அருகில் உள்ள ஒரு குறுங்கோளாகும்.
  • எனவே, அதன் சுற்றுப் பாதையானது இந்தக் குறுங்கோளைப் பூமிக்கு அருகில் கொண்டு வரும்.
  • 2029 ஆம் ஆண்டு ஏப்ரல் 13 அன்று பூமியின் பாதையில் இது வருவதற்கு 2.7 சதவிகித வாய்ப்புகள் உள்ளன.
  • இந்த வாய்ப்பானது தொரினோ அளவுகோலில் அதிக மதிப்பீட்டினைப் பெற்றுள்ளது.
தொரினோ அளவுகோல்
  • தொரினோ அளவுகோல் என்பது குறுங்கோள்கள் மற்றும் வால் நட்சத்திரங்கள் போன்ற பூமிக்கு அருகில் உள்ள பொருட்கள் தாக்குவதற்கான ஆபத்தினை வகைப்படுத்தும் முறையாகும்.
  • இந்த அளவுகோலில் 0 முதல் 10 வரையில் மதிப்புகள் உள்ளன.
  • மிகவும் அபாயகரமான நிகழ்வுகள் மிக அதிக தொரினோ அளவுகோல் மதிப்பினால் குறிக்கப்படுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்