TNPSC Thervupettagam

9வது அட்டவணை மற்றும் ஜார்க்கண்ட்

November 21 , 2022 608 days 384 0
  • ஜார்க்கண்ட் அரசானது, அம்மாநில அரசுப் பணிகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்காக,வேலைவாய்ப்பிற்கான இடஒதுக்கீட்டை 77% ஆக உயர்த்துகின்ற ஒரு மசோதாவினை நிறைவேற்றியுள்ளது.
  • எனவே, இது உச்ச நீதிமன்றத்தின் 50% இடஒதுக்கீடு என்ற ஆணையை (இந்திர சாவ்னி வழக்கு) மீறுகிறது.
  • மேலும், நீதிப் புணராய்வினைத் தவிர்க்கச் செய்வதற்காக இந்த மசோதாவினை 9வது அட்டவணையில் சேர்க்குமாறு அந்த அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
  • ஒன்பதாவது அட்டவணையானது (1வது அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் 31B என்ற பிரிவு சேர்க்கப் பட்டது), நீதிமன்றங்களில் எதிர்த்து வழக்குப் பதிவு செய்ய முடியாத மத்திய மற்றும் மாநில அரசின் சட்டங்களை உள்ளடக்கியப் பட்டியலைக் கொண்டுள்ளது.
  • தற்போது, ​​இது போன்ற 284 சட்டங்கள் நீதிப் புணராய்வில் இருந்து பாதுகாக்கப் பட்டு உள்ளன.
  • 31B என்ற பிரிவானது பின்னோக்கியச் சட்டங்களுக்குப் பயன்படுத்தப்படக் கூடியது.
  • 31B என்ற சட்டப் பிரிவானது, நீதிப் புணராய்விலிருந்து விடுப்பட்டாலும், ஒன்பதாவது அட்டவணையின் கீழ் உள்ள சட்டங்கள் அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பை மீறுவதாக இருந்தால் (I R கோயல்ஹோ வழக்கு 2007) அவை நீதிப் புணராய்விற்கு உட் படுத்தப் படும்.
  • எனவே, 1973 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 ஆம் தேதிக்குப் பிறகு ஒன்பதாவது அட்டவணையில் சேர்க்கப்பட்ட எந்தச் சட்டத்தையும் எதிர்த்து வழக்குப் பதிவு செய்ய முடியும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்