9வது ஆசிய குளிர்கால விளையாட்டுப் போட்டிகள் சீனாவின் ஹார்பின் எனுமிடத்தில் நடைபெற்றன.
இப்போட்டிகளுக்கான அதிகாரப்பூர்வச் சின்னங்கள் ஆனது, "பின்பின்" மற்றும் "நினி" (புலிகள்), மற்றும் அந்தப் போட்டிக்கான ஒரு முழக்கமாக "Dream of Winter, Love among Asia" வெளியிடப்பட்டது.
சீனா 85 பதக்கங்களுடன் (32 தங்கம், 27 வெள்ளி, 26 வெண்கலம்) பதக்கப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது.
தென்கொரியக் குடியரசு 45 பதக்கங்களுடன் (16 தங்கம், 15 வெள்ளி, 14 வெண்கலம்) இரண்டாவது இடத்தைப் பிடித்தது.
ஜப்பான் 37 பதக்கங்களுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்தது.
கஜகஸ்தான் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகியவை இதன் முதல் ஐந்து இடங்களில் இடம் பெற்றன.
இந்தியா 59 விளையாட்டு வீரர்களைக் கொண்ட மிகப்பெரியக் குழுவை அனுப்பியது, ஆனால் எந்த பதக்கங்களையும் வெல்லவில்லை.