TNPSC Thervupettagam

9வது ஆசிய நாடுகளின் எரிசக்தி அமைச்சர்கள் வட்டமேசை (AMER9) மாநாடு

March 8 , 2023 501 days 271 0
  • பெங்களுருவில் நடைபெற்ற சர்வதேச எரிசக்தி மன்றத்துடன் (IEF) சேர்த்து 9வது ஆசிய நாடுகளின் எரிசக்தி அமைச்சர்கள் வட்டமேசை (AMER9) மாநாட்டினையும் இந்திய அரசு நடத்துகிறது.
  • இந்த நிகழ்வின் கருத்துரு, "எரிசக்தி பாதுகாப்பு, உள்ளார்ந்த வளர்ச்சி மற்றும் எரிசக்தி வள மாற்றங்களுக்கான புதிய பாதைகளை உருவாக்குதல்" என்பதாகும்.
  • 2030 ஆம் ஆண்டிற்குள் தனது 40% எரிசக்தித் தேவையினை, புதைபடிவம் சாரா எரிசக்தி மூலங்களிலிருந்து பெற வேண்டும் என்ற தனது உறுதிப்பாட்டை 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திலேயே இந்தியா பூர்த்தி செய்துள்ளது.
  • சர்வதேச எரிசக்தி மன்றம் (IEF) ஆனது 71 உறுப்பினர் நாடுகளைக் கொண்ட உலகின் மிகப்பெரிய எரிசக்தி அமைப்பாகும்.
  • இதன் உறுப்பினர் நாடுகள், உலக எரிசக்திச் சந்தையில் 90 சதவீதத்தினைக் கொண்டு உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்