9வது இந்தியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா - முத்தரப்பு சந்திப்பு
April 11 , 2018 2419 days 758 0
9வது இந்தியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் முத்தரப்பு சந்திப்பு புதுதில்லியில் நடந்தது.
மூன்று நாடுகளும் இந்திய-பசிபிக் பகுதியில் மேம்படுத்தப்பட்ட இணைப்பு வசதிகளை அதிகரித்திட தொடர்ந்து ஒத்துழைப்பது என உறுதியேற்றுக் கொண்டுள்ளன.
இந்த முத்தரப்பு பேச்சுவார்த்தை 2011ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஹிலாரி கிளிண்டன் அமெரிக்காவின் வெளியுறவுத் துறைச் செயலாளராக இருந்த பொழுது ஆரம்பிக்கப்பட்டது.
அமைச்சர்கள் மட்டத்திலான முத்தரப்பு துவக்க பேச்சுவார்த்தை செப்டம்பர் மாதம் 2015ஆம் ஆண்டில் நியூயார்க்கில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தின் ஒரு துணைக் கூட்டத்தில் அப்போதைய அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலாளர் ஜான் கெர்ரியால் நடத்தப்பட்டது.
அமைச்சர்கள் மட்டத்திலான கடைசி பேச்சுவார்த்தை 2017ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அமெரிக்காவின் நியூயார்க்கில் நடைபெற்றது.