TNPSC Thervupettagam

9வது சர்வதேச இளையோர் பாய்மரப் படகோட்ட சாம்பியன்ஷிப்

December 22 , 2017 2577 days 906 0
  • 2017ஆம் ஆண்டின் டிசம்பர் 27 முதல் 31 வரை ஆந்திரப் பிரதேசத்திலுள்ள நெல்லூரின் கிருஷ்ணப்பட்டினம் துறைமுகத்தில் 9வது சர்வதேச இளையோர் பாய்மரப் படகோட்ட (Sailing) சாம்பியன்ஷிப் போட்டி நடத்தப்பட உள்ளது.
  • இதுவே இந்தியாவின் மிகப்பெரிய பாய்மரப் படகோட்டப் போட்டியாகும்.
  • இந்திய பாய்மரக்கப்பற் சங்கம் (Yachting Association of India – YAI) மற்றும் ஆசிய கடற் படகோட்ட கூட்டமைப்பு (Asian Sailing Federation – ASAF) ஆகியவற்றின் கீழ் செயல்படும் தமிழ்நாடு பாய்மர படகோட்ட சங்கம், நவயுகா பாய்மர படகோட்ட அகாடமி மற்றும் ஆந்திரப் பிரதேச பாய்மரக் கப்பற் சங்கம் ஆகியவற்றால் இச்சர்வதேச போட்டி நடத்தப்படுகிறது.
  • இத்துறைமுகத்தில் YAI சீனியர் மற்றும் தேசிய இளையோர் படகோட்ட சாம்பியன்ஷிப் போட்டிகளும் நடத்தப்படுகின்றது.
  • இதற்கு முந்தைய 8வது சர்வதேச இளையோர் சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் நடைபெற்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்