TNPSC Thervupettagam

AMBIS உடல் அங்க (பயோமெட்ரிக்) குற்றவாளிகள் கண்காணிப்பு அமைப்பு – மும்பை

August 1 , 2019 1817 days 672 0
  • கைது செய்யப்பட்ட குற்றவாளிகளுக்கான ஒரு மேம்படுத்தப்பட்ட கண்காணிப்பு அமைப்பானது மும்பையில் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது.
  • “AMBIS” (Automated Multimodal Biometric Identification System) ஆனது “தானியங்குப் பல்முனை உடல் அங்க அடையாள அமைப்பு” என்ற பெயர் கொண்டது. இந்தியாவில் உள்ள காவல் துறையினால் பயன்படுத்தப்படும் இதே வகையைச் சேர்ந்த முதலாவது அமைப்பு இதுவாகும்.
  • AMBIS ஆனது மைய வழங்ககத்துடன் (Server) இணைக்கப்பட்டுள்ளது. இது அனைத்து குற்றவாளிகளின் புகைப்படங்கள், கைரேகைகள் மற்றும் கருவிழி ஆகியவற்றைச் சேமித்து வைக்கின்றது.
  • இது கணிப்பொறியின் சுட்டியை அழுத்தியவுடன் குற்றவாளிகளை அடையாளம் காண உதவுகின்றது. இது உள்நாட்டில் அல்லது வெளிநாட்டில் குற்றவாளிகள் இருந்தாலும், அது குறித்தத் தகவலை காவல் துறையின் மற்ற பிரிவுகளுக்கு வழங்குகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்