சீனா மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த ஆய்வாளர்கள், ஒரு பருவத்திற்கு முன்பே அந்தப் பிராந்தியத்தில் காற்று மாசுபாட்டின் அளவைத் துல்லியமாகக் கணிக்க உதவும் கணினி மாதிரியை உருவாக்கியுள்ளனர்.
இந்தப் புள்ளி விவர மாதிரிகளானது பெருங்கடல்கள் தொடர்பான சில காலநிலை இயல்புகளைப் பயன்படுத்துகிறது.
வட இந்தியாவின் மீது குளிர்காலத்தில் ஏற்படும் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் விளைவுகளை பெருங்கடல்கள் கொண்டுள்ளன.
வட இந்தியாவில் குளிர்காலத்தில் ஏற்படும் தூசுப்படல மாசுபாட்டின் அளவானது கீழ்க்காணும் விளைவுகளின் கூட்டிணைவால் கட்டுபடுத்தப் படுகின்றது எனவும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
பசுபிக் பெருங்கடலில் ஏற்படும் காலநிலை சுழற்சி வானிலை முறைகளில் உலகளாவிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் எல்-நினோ.
தெற்கு அரைக் கோளத்தின் வளிமண்டல மாறுபாட்டில் குறைந்த அளவில் ஏற்படும் அண்டார்டிக் அலைவு.
இந்தப் புதிய மாதிரியானது குளிர் காலத்தில் தூசுப்படல மாசு நிலைகளை முன்னறிவிக்கவும் அதன்படி மாசுக் கட்டுப்பாட்டுத் திட்டங்களை உருவாக்கவும் அரசுகளுக்கு உதவும்.