TNPSC Thervupettagam

BCCI – தேசிய போதை மருந்து எதிர்ப்பு நிறுவனம்

August 11 , 2019 1935 days 750 0
  • இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமானது (Board of Control for Cricket in India - BCCI) தேசிய போதை மருந்து எதிர்ப்பு நிறுவனத்தின் (NADA - National Anti-Doping Agency) வரம்புக்குள் வர ஒப்புக் கொண்டுள்ளது.
  • தற்பொழுது வரை, ஸ்வீடனில் அமைந்துள்ள சர்வதேச போதை மருந்து பரிசோதனை மேலாண்மை அமைப்பு (IDTM - International Dope Testing Management) BCCIன் சார்பாக கிரிக்கெட் வீரர்களின் மாதிரிகளைச் சேகரித்து அவற்றைத் தேசிய போதை மருந்து பரிசோதனை ஆய்வகத்திடம் சமர்ப்பிக்கின்றது.
  • தற்பொழுது NADA ஆனது உள்ளூர் விளையாட்டுத் தொடர்கள், இருநாட்டு விளையாட்டுப் போட்டிகள், இந்தியப் பிரீமியர் லீக் தொடர் ஆகியவற்றின் போது அனைத்து கிரிக்கெட் வீரர்களின் மாதிரிகளையும் சேகரிக்கவிருக்கின்றது.
இது பற்றி
  • NADA ஆனது 1890 ஆம் ஆண்டின் சமூகப் பதிவுகள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட சமூதாய அமைப்பாக போதைப் பொருள் அற்ற விளையாட்டுகளை இந்தியாவில் நடத்தும் நோக்கத்துடன் 2005 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது.
  • இது இந்தியாவில் உள்ள அனைத்து வகையான விளையாட்டுகளிலும் போதை மருந்து கட்டுப்பாட்டுத் திட்டத்தை மேம்படுத்துதல், கண்காணித்தல் மற்றும் ஒருங்கிணைத்தல் ஆகிய பணிகளை மேற்கொள்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்