இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமானது (Board of Control for Cricket in India - BCCI) தேசிய போதை மருந்து எதிர்ப்பு நிறுவனத்தின் (NADA - National Anti-Doping Agency) வரம்புக்குள் வர ஒப்புக் கொண்டுள்ளது.
தற்பொழுது வரை, ஸ்வீடனில் அமைந்துள்ள சர்வதேச போதை மருந்து பரிசோதனை மேலாண்மை அமைப்பு (IDTM - International Dope Testing Management) BCCIன் சார்பாக கிரிக்கெட் வீரர்களின் மாதிரிகளைச் சேகரித்து அவற்றைத் தேசிய போதை மருந்து பரிசோதனை ஆய்வகத்திடம் சமர்ப்பிக்கின்றது.
தற்பொழுது NADA ஆனது உள்ளூர் விளையாட்டுத் தொடர்கள், இருநாட்டு விளையாட்டுப் போட்டிகள், இந்தியப் பிரீமியர் லீக் தொடர் ஆகியவற்றின் போது அனைத்து கிரிக்கெட் வீரர்களின் மாதிரிகளையும் சேகரிக்கவிருக்கின்றது.
இது பற்றி
NADA ஆனது 1890 ஆம் ஆண்டின் சமூகப் பதிவுகள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட சமூதாய அமைப்பாக போதைப் பொருள் அற்ற விளையாட்டுகளை இந்தியாவில் நடத்தும் நோக்கத்துடன் 2005 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது.
இது இந்தியாவில் உள்ள அனைத்து வகையான விளையாட்டுகளிலும் போதை மருந்து கட்டுப்பாட்டுத் திட்டத்தை மேம்படுத்துதல், கண்காணித்தல் மற்றும் ஒருங்கிணைத்தல் ஆகிய பணிகளை மேற்கொள்கின்றது.