தரைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் ஆயுதந் தாங்கிய வாகனங்கள் மற்றும் ஆயுத/துணை ராணுவப் படைகளின் சிறப்பு வாகனங்கள் ஆகியவற்றிற்கு பாரத் விதிமுறைகள் VI (Bharat Stage VI) என்ற உமிழ்வு விதிமுறைகளிலிருந்து விலக்கு அளித்து இருக்கின்றது.
இதற்குத் தகுந்த BS VI இயந்திரங்களை உருவாக்குவதற்குத் தேவைப்படும் காலம் மற்றும் பாதுகாப்புக் காரணங்கள் ஆகியவற்றுக்காக இந்த விலக்கு அளிக்கப்பட்டு இருக்கின்றது.
விலக்கு அளிக்கப்பட்ட மற்ற வாகனங்கள்
நாட்டின் பாதுகாப்பு தொடர்பான அரசு காரணங்களுக்காகப் பயன்படுத்தப்படும் மோட்டார் வாகனங்கள்.
உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு மேலாண்மை ஆகியவற்றுக்காக பயன்படுத்தப்படும் ஆயுதம் தாங்கிய வாகனங்கள்.