TNPSC Thervupettagam

CITESற்கு இந்தியாவின் பரிந்துரைகள்

August 10 , 2019 1936 days 1007 0
  • வன விலங்குகள் மற்றும் தாவரங்களின் ஆபத்தான இனங்களில் சர்வதேச வர்த்தகம் மீதான ஒப்பந்தப் (CITES - Convention on International Trade in Endangered Species on Wild Fauna and Flora) பட்டியலில் பல்வேறு வனவிலங்கு இனங்களின் பட்டியலில் மாற்றம் செய்வது குறித்த தனது பரிந்துரையை இந்தியா சமர்ப்பித்துள்ளது.
  • CITES என்பது வனவிலங்குகள் மற்றும் தாவரங்கள் உயிர் வாழ்வதைப் பாதிக்காத வகையில் வர்த்தகம் செய்வதை உறுதி செய்வதற்கான ஒரு சர்வதேச ஒப்பந்தமாகும்.
  • இது சர்வதேச வர்த்தகத்தில் அதிக அபாயத்தை எதிர் கொண்டிருக்கும் பின்வரும் அனைத்து விலங்கு இனங்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
உயிரினங்கள்
  • டோக்கோ ஜெக்கோ
  • வெட்ஜ் மீன்
இந்திய நட்சத்திர ஆமை
  • மேலும் இந்தியா நட்சத்திர ஆமைகளை CITESன் பட்டியல் IIலிருந்து பட்டியல் Iற்கு மாற்றப் பரிந்துரைத்துள்ளது.
  • இந்த இனங்கள் இரண்டு அச்சுறுத்தல்களை எதிர் கொண்டிருக்கின்றன.
    • விவசாயத்திற்காக அதன் வாழ்விட இழப்பு
    • செல்லப் பிராணி வர்த்தகத்திற்காக இதனை சட்ட விரோதமாக கடத்திச் செல்லுதல்.
ஆற்று நீர் நாய் மற்றும் காட்டு நீர் நாய்
  •  அதிக அளவிலான அச்சுறுத்தல் நிலையில் உள்ள இனங்களுக்காக CITESன் பட்டியல் II லிருந்து பட்டியல் Iற்கு அந்த இனங்களை மாற்றுவதற்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இந்திய சிசே மரம் (ரோஸ்வுட்)
  •  இந்திய சிசே மரத்தை (ரோஸ்வுட்) CITESன் பட்டியல் II-லிருந்து நீக்குவதற்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்