வன விலங்குகள் மற்றும் தாவரங்களின் ஆபத்தான இனங்களில் சர்வதேச வர்த்தகம் மீதான ஒப்பந்தப் (CITES - Convention on International Trade in Endangered Species on Wild Fauna and Flora) பட்டியலில் பல்வேறு வனவிலங்கு இனங்களின் பட்டியலில் மாற்றம் செய்வது குறித்த தனது பரிந்துரையை இந்தியா சமர்ப்பித்துள்ளது.
CITES என்பது வனவிலங்குகள் மற்றும் தாவரங்கள் உயிர் வாழ்வதைப் பாதிக்காத வகையில் வர்த்தகம் செய்வதை உறுதி செய்வதற்கான ஒரு சர்வதேச ஒப்பந்தமாகும்.
இது சர்வதேச வர்த்தகத்தில் அதிக அபாயத்தை எதிர் கொண்டிருக்கும் பின்வரும் அனைத்து விலங்கு இனங்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
உயிரினங்கள்
டோக்கோ ஜெக்கோ
வெட்ஜ் மீன்
இந்திய நட்சத்திர ஆமை
மேலும் இந்தியா நட்சத்திர ஆமைகளை CITESன் பட்டியல் IIலிருந்து பட்டியல் Iற்கு மாற்றப் பரிந்துரைத்துள்ளது.
இந்த இனங்கள் இரண்டு அச்சுறுத்தல்களை எதிர் கொண்டிருக்கின்றன.
விவசாயத்திற்காக அதன் வாழ்விட இழப்பு
செல்லப் பிராணி வர்த்தகத்திற்காக இதனை சட்ட விரோதமாக கடத்திச் செல்லுதல்.
ஆற்று நீர் நாய் மற்றும் காட்டு நீர் நாய்
அதிக அளவிலான அச்சுறுத்தல் நிலையில் உள்ள இனங்களுக்காக CITESன் பட்டியல் II லிருந்து பட்டியல் Iற்கு அந்த இனங்களை மாற்றுவதற்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இந்திய சிசே மரம் (ரோஸ்வுட்)
இந்திய சிசே மரத்தை (ரோஸ்வுட்) CITESன் பட்டியல் II-லிருந்து நீக்குவதற்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.