TNPSC Thervupettagam

PT உஷாவிற்கு “முதுபெரும் பட்டம்”

July 26 , 2019 1823 days 736 0
  • புகழ்பெற்ற தடகள வீராங்கனையான PT உஷா சர்வதேசத் தடகள கூட்டமைப்பு மன்றத்தின் (International Association of Athletics Federation’s - IAAF) முதுபெரும் பட்டத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளார்.

  • தடகளப் போட்டிகளுக்கு இவருடைய நீண்ட கால மற்றும் திறன்மிக்க சேவைகளை அங்கீகரிக்கும் விதமாக இந்தக் கௌரவிப்பு நிகழ்ந்துள்ளது.
  • 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் கத்தாரில் நடைபெறவிருக்கும் 52-வது IAAF கூட்டத்தில் இவருக்கு அவ்விருது வழங்கப்படவிருக்கின்றது.
  • இவர் பெரும்பாலும் “இந்தியத் தடகளத்தின் அரசி” என்று போற்றப் படுகின்றார்.
  • 1984 ஆம் ஆண்டில் நடைபெற்ற லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டியில் உஷாவின் திறமைமிக்க செயல்பாடு வெளிப்பட்டது.
  • 400 மீட்டர் தடை ஓட்டத்தில் இறுதி ஆட்டம் வரை சென்ற முதல் இந்திய வீராங்கனை இவராவார். ஆனால் இவர் வெண்கலப் பதக்கத்தை இழந்தார்.
  •  

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்