புகழ்பெற்ற தடகள வீராங்கனையான PT உஷா சர்வதேசத் தடகள கூட்டமைப்பு மன்றத்தின் (International Association of Athletics Federation’s - IAAF) முதுபெரும் பட்டத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளார்.
தடகளப் போட்டிகளுக்கு இவருடைய நீண்ட கால மற்றும் திறன்மிக்க சேவைகளை அங்கீகரிக்கும் விதமாக இந்தக் கௌரவிப்பு நிகழ்ந்துள்ளது.
2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் கத்தாரில் நடைபெறவிருக்கும் 52-வது IAAF கூட்டத்தில் இவருக்கு அவ்விருது வழங்கப்படவிருக்கின்றது.
இவர் பெரும்பாலும் “இந்தியத் தடகளத்தின் அரசி” என்று போற்றப் படுகின்றார்.
1984 ஆம் ஆண்டில் நடைபெற்ற லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டியில் உஷாவின் திறமைமிக்க செயல்பாடு வெளிப்பட்டது.
400 மீட்டர் தடை ஓட்டத்தில் இறுதி ஆட்டம் வரை சென்ற முதல் இந்திய வீராங்கனை இவராவார். ஆனால் இவர் வெண்கலப் பதக்கத்தை இழந்தார்.