ஐதராபாத் ஐஐடியில் உள்ள ஆய்வாளர்கள் இந்தியாவில் உள்ள குங்குமம் தயாரிக்கப் பயன்படும் ஆயத்த ஆடைக்கான வண்ணச் சாயத்தைப் பயன்படுத்துவதன் மூலம் குறைந்த விலை மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த சூரிய மின்கலன்களை உருவாக்கியுள்ளனர்.
இந்த சாய - உணர் திறன் கொண்ட சூரிய மின் கலமானது நீர்கலந்த மின்பகு பொருள் மற்றும் பிளாட்டினம் அற்ற எதிர்மின் முனைகளுடன் கூடிய புதிய புசின் சாயத்தை அடிப்படையாகக் கொண்டது.
தற்போதைய சிலிக்கான் அடிப்படையிலான சூரிய மின்கலன்களின் அதிக கட்டுருவாக்க செலவுகளானது அதிகளவிலான உற்பத்தி மற்றும் பரந்த பொதுப் பயன்பாட்டிற்கு ஒரு தடையாக உள்ளது.
இந்தப் புதிய முறை மேற்கண்ட குறைகளை நிவர்த்தி செய்கின்றது.