TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

July 24 , 2019 1824 days 1166 0
  • தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் வாய்ப்புகளைப் புதுப்பிக்கும் விதமாக, கால்நடைத் துறை அமைச்சரான உடுமலை K. இராதாகிருஷ்ணனை தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் தலைவராக நியமித்துள்ளது.
  • ஜூலை 04 முதல் ஜூலை 07 வரை 2019 ஆம் ஆண்டின் உலகக் குழந்தைகளின் வெற்றியாளர் போட்டிகள் மாஸ்கோவில் நடத்தபட்டன.
    • இது புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு, அதிலிருந்து மீண்ட குழந்தைகளுக்காக நடத்தப்பட்டது.
  • ஐக்கிய இராஜ்ஜியத்தின் செல்வமிக்க விர்ஜின் கேலடிக் நிறுவனம் தனது முதலாவது பரிசோதனை விண்கலனை மாற்றியமைக்கப்பட்ட போயிங் 747 விமானத்திலிருந்து ஏவியுள்ளது.
    • இது விண்வெளிக்கு வணிக ரீதியிலான சுற்றுலாவிற்குத் தயாராவதற்காக ரிச்சர்ட் ப்ரான்சனின் விண்வெளி நிறுவனத்தினால் மேற்கொள்ளப்படும் சோதனைகளின் ஒரு பகுதியாகும்.
  • ஐக்கிய இராஜ்ஜியத்தின் அடுத்தப் பிரதமராக போரிஸ் ஜான்சன் பதவி ஏற்கவிருக்கின்றார். இவருக்கு முன்பு தெரஸா மே ஐக்கிய இராஜ்ஜியத்தின் பிரதமராக இருந்தார். போரிஸ் ஜான்சன் பழமைவாதக் கட்சியைச் சேர்ந்தவர் ஆவார்.
  • அயோத்தியாவில் பாயும் சரயு நதிக் கரையில் 251 மீட்டர் உயரம் கொண்ட இராமர் சிலையை அமைக்க உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் முடிவு செய்துள்ளார்.
    • இந்தச் சிலை அமைக்கப்பட்டால் குஜராத்தில் உள்ள ஒற்றுமைக்கான சிலையை விட இது உயரமானதாக இருக்கும். மேலும் இது உலகின் மிக உயரிய சிலையாகவும் விளங்கும்.
  • இராணுவத்தின் கிழக்குப் பிராந்தியத் தளபதியான லெப்டினன்ட் முகுந்த் நாராவானே இந்திய இராணுவத்தின் அடுத்த துணைத் தலைமைத் தளபதியாக நியமிக்கப் பட்டுள்ளார்.
    • 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31 அன்று ஓய்வு பெறவிருக்கும் லெப்டினன்ட் ஜெனரல் டி அன்பு  என்பவருக்குப் பின்பு இவர் அப்பதவியை ஏற்கவிருக்கின்றார்.
  • இந்திய ரிசர்வ் வங்கியின் தகவலின் படி, நாட்டில் மிக அதிகமான ஏடிஎம் மோசடி வழக்குகள் மகாராஷ்டிராவில் (233) பதிவாகியுள்ளன. இதற்கு அடுத்து தில்லி (179) மற்றும் தமிழ்நாடு (147) ஆகிய மாநிலங்களில் அதிகமான வழக்குகள் பதிவாகியுள்ன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்