1984 ஆம் ஆண்டுப் பிரிவைச் சேர்ந்த இந்திய ஆட்சிப் பணி அதிகாரி மற்றும் மத்திய எரிசக்தித் துறை அமைச்சகத்தின் செயலாளரான அஜய் குமார் பல்லா என்பவர் மத்திய உள்துறை அமைச்சகத்தின் சிறப்புப் பணி அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இவரது நியமனம் உடனடியாக நடைமுறைக்கு வருகின்றது.
பல்லா என்பவர் 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை மத்திய உள்துறைச் செயலாளராக நிலையான 2 ஆண்டுப் பதவிக் காலத்தைப் பெறவிருக்கின்றார்.
20-வது கார்கில் நினைவு தினத்தின் போது இராணுவத்தின் வடக்குப் பிராந்தியக் கமாண்டரான லெப்டினன்ட் ஜெனரல் ரன்பீர் சிங் என்பவர் இந்திய இராணுவத்தின் XIVவது படைப் பிரிவு குறித்து “ஆயுத மற்றும் சீற்றப் படை – வல்லமை, மனோபலம் மற்றும் தியாகத்தின் சரித்திரம்” என்ற ஒரு புத்தகத்தை வெளியிட்டுள்ளார்.
XIVவது படைப் பிரிவின் புனைப்பெயர் ஆயுத மற்றும் சீற்றப் படையாகும். இதன் தலைமையிடம் கார்கிலிலிருந்து 28 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கும்பாத்தாங்கில் அமைந்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி “சந்திர சேகர் – கருத்தியல் அரசியலின் கடைசி உருவம்” என்ற ஒரு புத்தகத்தை வெளியிட்டுள்ளார். இந்தப் புத்தகம் மாநிலங்கள் அவையின் துணைத் தலைவரான ஹரிவன்ஷ் மற்றும் ரவி தத் பஜ்பாய் ஆகியோரால் எழுதப்பட்டதாகும்.