36-வது சரக்கு மற்றும் சேவைகள் வரி (Goods and Services Tax) ஆணையக் கூட்டத்தின் போது, அனைத்து மின்சார வாகனங்களின் மீதான GST வரி விகிதம் 12 சதவிகிதத்திலிருந்து 5 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டுள்ளது என்றும் மின்சார வாகனங்களுக்கான மின்னேற்றுச் சாதனங்கள் மற்றும் மின்னேற்று நிலையங்கள் மீதான GST வரி விகிதம் 18 சதவிகிதத்திலிருந்து 5 சதவிகிதமாகக் குறைக்கப் பட்டுள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மும்பை மற்றும் கோல்ஹாப்பூர் ஆகிய நகரங்களுக்கு இடையே இயங்கும் மகாலட்சுமி விரைவு இரயிலானது உல்ஹாஸ் ஆற்றில் ஏற்பட்ட மிக அதிகளவிலான வெள்ளத்தின் காரணமாக நடுவழியில் சிக்கிக் கொண்டது. அதில் 100ற்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் மேற்கொண்டனர். பின்னர் இந்தப் பயணிகள் அனைவரும் மீட்கப்பட்டனர்.
உல்ஹாஸ் நதியானது அரபிக் கடலில் கலக்கின்ற ஒரு மேற்கு நோக்கிப் பாயும் நதியாகும்.