TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

August 7 , 2019 1942 days 1178 0
  • வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா விலங்கியல் பூங்காவைச் சேர்ந்த அதிகாரிகள் விலங்கு பரிமாற்றத் திட்டத்தின் ஒரு பகுதியாக அஸ்ஸாமில் உள்ள காசிரங்கா தேசிய பூங்காவிலிருந்து 4 வயது நிரம்பிய ஒரு காண்டாமிருகத்தைக் கொண்டு வந்துள்ளனர்.
    • 1985 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்தப் பூங்காவானது ஒரேயொரு காண்டாமிருகத்தை அப்போது கொண்டிருந்தது. அந்தக் காண்டாமிருகம் 1989 ஆம் ஆண்டில் உயிரிழந்தது.
  • “செல் அமைப்பு அல்லது நுண் உயிரியல் மதிப்பீடு ஆகியவற்றை மேற்கொள்வதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்ளாமல்” பாக்டீரியாவைக் கண்டறிவதற்கான இசைவுறு உணர்வியுடன் கூடிய ஒரு கையடக்கக் கருவியை குவஹாத்தியில் உள்ள இந்தியத் தொழில்நுட்ப நிறுவனத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் குழு மேம்படுத்தியுள்ளது.  மூளைக் காய்ச்சல் போன்ற சிக்கலான நோய்களைக் கண்டறிய இதைப் பயன்படுத்த முடியும்.
    • இது போன்று பாக்டீரியாவை விரைவாகக் கண்டறிவது, சுகாதார நலத்திற்கு மட்டுமல்லாமல் உயிரித் தாக்குதல் எதிர்ப்பு நடவடிக்கைகள் மற்றும் சுற்றுச்சூழல் கண்காணிப்பு ஆகியவற்றிற்கும் இக்கருவி முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகின்றது.
  • இந்தியப் பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியமானது (Securities and Exchange Board of India) சிங்கப்பூர் பங்கு பரிவர்த்தனை நிறுவனம் மற்றும் இந்திய தேசிய பங்குச் சந்தை நிறுவனம் (National Stock Exchange of India – NSE) ஆகியவை கூட்டாக இணைந்து குஜராத்தின்  சர்வதேச நிதியியல் தொழில்நுட்ப நகரமான காந்தி நகரில் செயல்பட ஒப்புதல் வழங்கியுள்ளது.
    • இந்த 2 நிறுவனங்களும்” NSE சர்வதேச நிதியியல் சேவை மையம் SG X கனெக்ட்” என்ற வர்த்தகத்திற்கான ஒரு புதிய தளத்தை உருவாக்கவிருக்கின்றன.
  • ஆகஸ்ட் 06 ஆம்  தேதியன்று ஹிரோஷிமா தினம் அனுசரிக்கப் படுகின்றது. இது 1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 06 அன்று ஜப்பானில் உள்ள ஹிரோஷிமா நகரின் மீது எனோலா கே என்ற விமானத்திலிருந்து லிட்டில் பாய் என்ற  அணுகுண்டு வீசப்பட்டதை நினைவு கூர்கின்றது.
    • இத்தினம் தற்பொழுது போர் எதிர்ப்பு, அணு ஆயுத விவாதங்கள் எதிர்ப்பு மற்றும் அணு ஆயுத சோதனைகள் எதிர்ப்பு ஆகியவற்றின் மீது கவனத்தைச் செலுத்துகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்