TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

August 14 , 2019 1804 days 850 0
  • தமிழ்நாடு முதலமைச்சரின் விரிவான சுகாதாரக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், “உடல் பருமன் அறுவை சிகிச்சையை” இணைத்துள்ள இந்தியாவின் முதலாவது மற்றும் ஒரே மாநிலம் தமிழ்நாடு ஆகும். இதன் மூலம் 100ற்கும் மேற்பட்ட பயனாளிகள் பயனடைந்துள்ளனர்.
  • மூன்று நாட்கள் நடைபெறக் கூடிய “உலக முதலீட்டாளர்கள் மாநாடானது” காஷ்மீரின் ஸ்ரீநகரில் அக்டோபர் 12 ஆம் தேதியிலிருந்து நடத்தப்படும் என்று இந்தியத் தொழிற்துறை கூட்டமைப்பு (CII - Confederation of Indian Industries) மற்றும் ஜம்மு காஷ்மீர் வர்த்தக ஊக்குவிப்பு அமைப்பு ஆகியவை அறிவித்துள்ளன.
  • ஒரு மாநிலத்தினால் பரிந்துரைக்கப்பட்டால் தேசிய சட்டப் பல்கலைக் கழகங்களைத் தவிர புதிய பல்கலைக் கழகங்களைத் திறப்பதற்கு “3 ஆண்டு கால தற்காலிகத் தடையை” இந்திய பார் கவுன்சில் (Bar Council of India - BCI) விதித்துள்ளது. சட்டக் கல்வியின் தரத்தை மேம்படுத்தும் நோக்கத்திற்காக இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
    • BCI என்பது இந்திய வழக்கறிஞர் குழுவை பிரதிநிதித்துவப் படுத்த மற்றும் ஒழுங்குபடுத்துவதற்காக  1961 ஆம் ஆண்டின் வழக்குரைஞர்களின் சட்டத்தின் கீழ் நாடாளுமன்றத்தால் உருவாக்கப்பட்ட ஒரு சட்டப்பூர்வ அமைப்பாகும்.
  • பசிபிக் தீவு நாடான பப்புவா நியூ கினியா ஆனது உலகில் அதிக எண்ணிக்கையிலான “வாழும்” (வழக்கத்தில் உள்ள) பூர்வகுடி மொழிகளைக் (840) கொண்டுள்ளது. இந்தியா 453 பூர்வகுடி மொழிகளுடன் 4வது இடத்தில் உள்ளது.
    • 2019 ஆம்  ஆண்டானது ஐக்கிய நாடுகளின் சர்வதேச பூர்வகுடி மொழிகள் ஆண்டாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
  • புது தில்லியில் நடைபெற்ற 2019 ஆம் ஆண்டின் உலக கல்வி மாநாட்டின் போது உயர் கல்வியில் தனது சாதனைகளுக்காக, “சிறந்த புத்தாக்கம் மற்றும் முன்னெடுப்பு ஆகியவற்றுக்கான தலைமைத்துவ விருதை” இராஜஸ்தான் மாநிலம் வென்றுள்ளது.
  • மொரீஷியஸில் நடைபெற்ற “மிஸ் உலக பன்முகத் தன்மை” என்ற ஒரு அழகிப் போட்டியில் இந்தியாவின் திருநங்கைப் பெண்மணியான நாஸ் ஜோஷி என்பவர் தொடர்ந்து மூன்றாவது முறையாக முடிசூட்டப்பட்டார்.
  • யாசின், பாலாபன் மற்றும் கயெம் என்ற துல்லியத் தன்மை கொண்ட வானிலிருந்து வான் இலக்கைத் தாக்கி அழிக்கும் 3 வழிகாட்டு ஏவுகணைகளை ஈரான் வெளியிட்டுள்ளது.
  • ஐக்கிய இராஜ்ஜியத்தின் லீட்ஸ் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் 0.47 நானோமீட்டர் (மீ நுண்ணளவு) அளவு கொண்ட மெல்லிய தங்கத்தை உருவாக்கியுள்ளனர். இது 2 அணுக்களைக் கொண்டு உருவாக்கப்பட்டதன் காரணமாக இது ஒரு இரு பரிமாணப் பொருளாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்