TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

August 17 , 2019 1801 days 855 0
  • தில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையானது இதே வகையைச் சேர்ந்த  முதலாவதான ஒரு  சுற்றுச்சூழல் நச்சுயியல் சார்ந்த மருத்துவ வசதியை இந்தியாவில் தொடங்கியுள்ளது. நீர், உணவு மற்றும் காற்றை மாசுபடுத்தும் சுற்றுச்சூழல் நச்சுகளின் விளைவாக அதிகரித்து வரும் நோய்கள் குறித்து ஆய்வு செய்ய இந்த மையம் பயன்படுத்தப்படும்.
  • இரண்டு நாட்கள் நடைபெறக் கூடிய மின்னணு நிர்வாகம் மீதான தேசியக் கருத்தரங்கானது மேகாலயாவில் ஷில்லாங்கில் நடத்தப்பட்டது.
  • புதைபடிவ ஆய்வாளர்கள் இதுவரை கண்டறியப்படாத மிகப்பெரிய கிளியின் புதை படிவங்களை நியூசிலாந்தில் கண்டறிந்துள்ளனர். இது 7 கிலோ கிராம் எடை கொண்டதாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
    • எதிர்பார்க்கப்படாத கண்டுபிடிப்பு, அதன் வலிமை மற்றும் வழக்கத்திற்கு மாறான அதன் அளவினை எடுத்துக்காட்டும் விதமாக இந்தப் புதிய இனத்திற்கு “ஹெராக்லஸ் இன்எக்ஸ்பெக்டேடஸ்” என்று பெயரிடப்பட்டுள்ளது.
  • “அனுபவமுள்ள பயிற்சியாளர்களிடமிருந்து” தொழில்முனைவின் அடிப்படையைப் புரிந்து கொள்வதற்கு மாணவர்கள்/புதிய தொழில் தொடங்குபவர்/தொழில்முனைவோர்கள் ஆகியோருக்காக “இ-ஸ்டெப்” (E-Step) என்ற ஒரு திட்டத்தை கர்நாடக தகவல் தொழில்நுட்பத் துறை தொடங்கியுள்ளது.
  • மின் வாகனங்கள் மற்றும் மின்னேற்றுக் கட்டமைப்புகள் குறித்த 3வது சர்வதேச மாநாடானது புது தில்லியில் நடத்தப்பட்டது.
  • இந்தியக் கிரிக்கெட் வாரியத்தினால் (Board of Control for Cricket in India - BCCI) ஆண்களின் மூத்தோர் தேசியக் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். இவருடைய பதவிக் காலம் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டு, 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் நிறைவடையவிருக்கின்றது.
  • சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 17 முறை தொடர்ந்து வெற்றி பெற்றதன் மூலம் தாய்லாந்து கிரிக்கெட் அணி ஒரு உலக சாதனையைப் படைத்துள்ளது. 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் எந்தவொரு அணியாலும் (ஆண் & பெண்) இதுவரை நிகழ்த்தப்படாத அதிக எண்ணிக்கையிலான தொடர் வெற்றிகள் இதுவாகும்.
  • பல்கேரியாவின் பசார்டிஸ்கிக்கில் நடைபெற்ற 2019 ஆம் ஆண்டின் பல்கேரிய இளையோர் சர்வதேச பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில்  இந்தியாவைச் சேர்ந்த வருண் கபூர் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.
  • மோட்டார் விளையாட்டுகளில் உலகப் பட்டத்தை வென்ற முதலாவது  இந்தியராக ஐஸ்வரியா பிஸ்ஸே என்பவர் உருவெடுத்து உலகச் சாதனை படைத்துள்ளார். இவர் ஹங்கேரியில் மகளிர் பிரிவில் சர்வதேச இருசக்கரப் போட்டி கூட்டமைப்பின் (FIM - International Motorcycling Federation) உலகக் கோப்பையை வென்றுள்ளார்.
    • இந்தப் போட்டியானது உலகில் இருசக்கர போட்டியை நிர்வகிக்கும் அமைப்பான FIMயினால் நடத்தப்பட்டது.
  • உலகில் மிகக் கடுமையான மிதிவண்டிப் போட்டிகளுள் ஒன்றில் (4000 கிலோ மீட்டர்) வெற்றி பெற்ற முதலாவது பெண்மணியாக ஜெர்மனியைச் சேர்ந்த புற்றுநோய் ஆராய்ச்சியாளர் பியோனா கோல்பிங்கர் என்பவர் உருவெடுத்துள்ளார். இந்தப் போட்டியானது பல்கேரியா மற்றும் பிரான்சிற்கு இடையே நடத்தப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்