TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

July 26 , 2019 1822 days 1179 0
  • பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவையானது (Cabinet Committee on Economic Affairs - CCEA) 40 இலட்ச மெட்ரிக் டன் அளவிலான சர்க்கரையை இருப்பு வைப்பதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.
    • 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 01 ஆம் தேதி முதல் 2020 ஆம் ஆண்டு ஜூலை 31 வரையிலான 1 ஆண்டு காலத்திற்கு சர்க்கரை இருப்பு வைக்கப் படவிருக்கின்றது.
  • வீரப்ப மொய்லி தலைமையிலான நிதிக்கான நிலைக் குழுவானது “நாட்டிற்கு உள்ளே மற்றும் நாட்டிற்கு வெளியே ஆகிய இரண்டிலும் கணக்கில் காட்டப்படாத வருமானம்/சொத்தின் நிலை: ஒரு விமர்சனக் கருத்தாய்வு” என்ற ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
    • இது 1980 ஆம் ஆண்டு முதல் 2010 ஆம் ஆண்டு வரையிலான பல்வேறு காலகட்டத்தில் இந்தியர்களால் கணக்கில் காட்டப்படாத சொத்தின் கணிக்கப்பட்ட மதிப்பு 216.48 பில்லியன் டாலரிலிருந்து 490 பில்லியன் டாலர் வரை இருக்கும் என்று கூறுகின்றது.
  • மத்தியத் தொழில் பாதுகாப்புப் படையானது (CISF - Central Industrial Security Force) பாதுகாப்புக் களஞ்சியம் என்ற ஒரு நிகழ்நேர கலைக் களஞ்சியத்தையும் தனது வீரர்களுக்காக “CISFtube” என்ற ஒரு காணொலி இடைமுகத்தையும் தொடங்கியுள்ளது.
    • CISF ஆனது ஒரு பொத்தானை அழுத்துவதன் மூலம் தொழில்நுட்ப அறிவை தனது வீரர்களுக்கு கிடைக்கச் செய்து அதன் மூலம் தனது வீரர்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்