65 நகரங்களில் போக்குவரத்து செயல்பாடுகளுக்காகவும் 8 மாநிலப் போக்குவரத்துத் துறை நிறுவனங்களுக்காக நகரங்களுக்கிடையேயான போக்குவரத்துச் செயல்பாடுகளுக்காகவும் 5645 மின்சாரப் பேருந்துகளுக்கான அனுமதியை அமைச்சகங்களுக்கிடையேயான ஒரு குழுவானது ஒப்புதல் வழங்கியுள்ளது என்று நிதி ஆயோக்கின் தலைமை நிர்வாக அதிகாரியான அமிதாப் காந்த் அறிவித்துள்ளார்.
1984 ஆம் ஆண்டு பிரிவைச் சேர்ந்த இந்திய ஆட்சிப் பணி அதிகாரியான ராஜிவ் குமார் மத்திய நிதித் துறையின் புதிய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்காவின் மாசாசுசெட்சில் காம்பிரிட்ஜில் உள்ள ஹார்வர்டு மைக்ரோபோட்டிக்ஸ் ஆய்வகமானது நீடித்த வகையில் ஒரு இணைக்கப்படாத விமானமான “ரோபோபீ எக்ஸ்-விங்” என்ற இலகுவான, பூச்சி அளவிலான ஒரு வான்வழி வாகனத்தைத் தயாரித்துள்ளது.இது ஒரு பூச்சியைப் போலவே ஒரு வினாடிக்கு 120 முறை இறக்கைகளை மடக்குகின்றது.
இயற்கைத் தேர்வின் இயந்திர அடிப்படையைப் புரிந்து கொள்ளுதல் மற்றும் சுற்றுச்சூழல் கண்காணிப்பு ஆகியவை இதன் நடைமுறைப் பயன்பாடுகளில் அடங்கும்.
உலகின் பரபரப்பான எண்ணெய்ப் போக்குவரத்துப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்களுக்கு ஐரோப்பா தலைமையிலான படை பாதுகாப்பு அளிக்கத் திட்டமிட்டுள்ளதாக பிரிட்டன் அறிவித்துள்ளது.
ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் படையால் ஜூலை 19 அன்று இங்கிலாந்து கொடியிடப்பட்ட கப்பலான ஸ்டெனோ இம்பெரோவைக் கைப்பற்றியதற்கு பதிலடியாக இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.