மத்திய கலாச்சாரத் துறை அமைச்சர் பிரகலாத் சிங் கலாச்சாரத் துறை அமைச்சகத்தின் மூத்தோர் / இளையோர் ஆகியோருக்கு ஆராய்ச்சிக்காக நிதியுதவி அளிக்கும் திட்டத்தில் நேபாளி மற்றும் சந்தாலி ஆகிய மொழிகள் இணைக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.
மூத்தோர் / இளையோர் ஆகியோருக்கு ஆராய்ச்சிக்காக நிதியுதவி அளிக்கும் திட்டத்தில் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படும் வரை இத்திட்டத்தைச் செயல்படுத்தும் முதன்மை நிறுவனம் புது தில்லியில் உள்ள கலாச்சார வளங்கள் மற்றும் பயிற்சி மையமாகும் (Centre for Cultural Resources and Training - CCRT).
இந்தியாவைச் சேர்ந்த ஒரு இயற்பியல் கோட்பாட்டு வல்லுநரான அதிஷ் தப்ஹோல்கர் அப்துஸ் சலாம் சர்வதேச இயற்பியல் கோட்பாட்டு மையத்தின் (International Centre for Theoretical Physics - ICTP) புதிய இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த மையம் இத்தாலியின் டிரைஸ்டியில் உள்ளது.
தப்ஹோல்கர் யுனெஸ்கோவின் துணை இயக்குநர் ஜெனரல் என்ற தகுதி நிலையுடன் ICTP இயக்குநராக தனது பொறுப்பை ஏற்க விருக்கின்றார்.
எம்ஐ – 17 என்ற வானூர்தியிலிருந்துப் பறக்க உதவும் ஆடை அணிந்து குதித்த முதலாவது இந்திய விமானப் படை விமானி தருண் சௌத்ரி ஆவார். இவர் விங் கமாண்டராக உள்ளார். இவர் 8500 அடி உயரத்திலிருந்து குதித்தார்.
இவர் ஜூலை 21 அன்று ஜோத்பூரில் நடைபெற்ற கார்கில் திவாஸ் கொண்டாட்டங்களின் போது இதனை நிகழ்த்தினார்.
2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 01 ஆம் தேதி முதல் சுற்றுலா நோக்கங்களுக்காக நுழைவு இசைவு கட்டணங்களிலிருந்து இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு இலங்கை அரசு விலக்கு அளித்துள்ளது.
இன்போசிஸ் நிறுவனம், தனது புகழ்பெற்ற இணையப் பாதுகாப்பு மையத்தை ரோமானியாவின் பச்சரஸ்டில் தொடங்கியுள்ளது.
இந்தப் பாதுகாப்பு மையம் தொடக்கம் முதல் இறுதிநிலை வரை, அனைத்து நாட்களிலும் 24 மணி நேரமும் நிகழ்நேரத்திற்கான இணையப் பாதுகாப்பு கண்காணிப்பு மற்றும் அது தொடர்பான சேவைகளை அளிக்கும்.