எட்டாவது வருடாந்திர நெகிழி சேகரிப்பு இயக்கமானது கேரளாவில் உள்ள வேம்பநாட்டு ஏரியில் தொடங்கியது.
இது ஒரு இராம்சார் தளமாக அடையாளப்படுத்தப் பட்டதாகும். உலகின் மிகவும் மாசுபட்ட நீர் நிலைகளில் ஒன்றாகவும் இது விளங்குகின்றது.
எத்தியோப்பியப் பிரதமர் அபிய் அகமது “பசுமை மரபு முன்னெடுப்பு” என்ற ஒரு தேசிய அளவிலான மரம் நடுதல் இயக்கத்தைத் தொடங்கி வைத்தார்.
இத்திட்டத்தின் கீழ் ஒரே நாளில் 350 மில்லியனிற்கும் மேற்பட்ட மரங்கள் நடப்பட்டுள்ளன. இது ஒரு உலக சாதனையாக இருக்கும் என்று நம்பப்படுகின்றது.
200 யூனிட்டுகள் வரை மின்சாரத்தைப் பயன்படுத்தும் மக்களுக்கு இலவச மின்சாரம் அளிக்கப்படும் என்று தில்லி அரசு அறிவித்துள்ளது. 201 யூனிட்டுகள் முதல் 400 யூனிட்டுகள் வரையிலான மின்சாரத்தைப் பயன்படுத்தும் மக்களுக்கு மாநில அரசினால் 50 சதவிகித மானியம் அளிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கரக்பூரில் உள்ள இந்தியத் தொழில்நுட்ப நிறுவனமானது திடக் கழிவு மேலாண்மைக்காக “நீர்ம வெப்ப கரிமமாக்கல்” (Hydro Thermal Carbonization - HTC) என்ற ஒரு புதிய தொழில்நுட்பத்தை மேம்படுத்தியுள்ளது.
HTC தொழில்நுட்பமானது நகராட்சித் திடக் கழிவை உயிரி எரிபொருள், மாற்றியமைக்கப்பட்ட மண் மற்றும் உறிஞ்சிகளாக மாற்றும் திறன் கொண்டது. திடக் கழிவை திறமையுடன் கையாளுவதற்கு உள்ளூர் அமைப்புகளினால் இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த முடியும்.
காமன்வெல்த் டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பின் (CTTF - Commonwealth Table Tennis Federation) தலைவராக இந்தியாவைச் சேர்ந்த விவேக் கோலியும் அதன் பொதுச் செயலாளராக MP சிங்கும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
CTTFன் தற்போதையத் தலைவர் துஷ்யந்த் சௌதாலா ஆவார். முதன் முறையாக தற்பொழுது CTTFன் அனைத்து மூன்று பதவிகளும் இந்தியர்களால் வகிக்கப்படுகின்றது.