TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

August 2 , 2019 1947 days 1271 0
  • எட்டாவது வருடாந்திர நெகிழி சேகரிப்பு இயக்கமானது கேரளாவில் உள்ள வேம்பநாட்டு ஏரியில் தொடங்கியது.
    • இது ஒரு இராம்சார் தளமாக அடையாளப்படுத்தப் பட்டதாகும். உலகின் மிகவும் மாசுபட்ட நீர் நிலைகளில் ஒன்றாகவும் இது விளங்குகின்றது.
  • எத்தியோப்பியப் பிரதமர் அபிய் அகமது “பசுமை மரபு முன்னெடுப்பு” என்ற ஒரு தேசிய அளவிலான மரம் நடுதல் இயக்கத்தைத் தொடங்கி வைத்தார்.
    • இத்திட்டத்தின் கீழ் ஒரே நாளில் 350 மில்லியனிற்கும் மேற்பட்ட மரங்கள் நடப்பட்டுள்ளன. இது ஒரு உலக சாதனையாக இருக்கும் என்று நம்பப்படுகின்றது.
  • 200 யூனிட்டுகள் வரை மின்சாரத்தைப் பயன்படுத்தும் மக்களுக்கு இலவச மின்சாரம் அளிக்கப்படும் என்று தில்லி அரசு அறிவித்துள்ளது. 201 யூனிட்டுகள் முதல் 400 யூனிட்டுகள் வரையிலான மின்சாரத்தைப் பயன்படுத்தும் மக்களுக்கு மாநில அரசினால் 50 சதவிகித மானியம் அளிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
  • கரக்பூரில் உள்ள இந்தியத் தொழில்நுட்ப நிறுவனமானது திடக் கழிவு மேலாண்மைக்காக “நீர்ம வெப்ப கரிமமாக்கல்” (Hydro Thermal Carbonization - HTC) என்ற ஒரு புதிய தொழில்நுட்பத்தை மேம்படுத்தியுள்ளது.
    • HTC தொழில்நுட்பமானது நகராட்சித் திடக் கழிவை உயிரி எரிபொருள், மாற்றியமைக்கப்பட்ட மண் மற்றும் உறிஞ்சிகளாக மாற்றும் திறன் கொண்டது. திடக் கழிவை திறமையுடன் கையாளுவதற்கு உள்ளூர் அமைப்புகளினால் இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த முடியும்.
  • காமன்வெல்த் டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பின் (CTTF - Commonwealth Table Tennis Federation) தலைவராக இந்தியாவைச் சேர்ந்த விவேக் கோலியும் அதன் பொதுச் செயலாளராக MP சிங்கும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
    • CTTFன் தற்போதையத் தலைவர் துஷ்யந்த் சௌதாலா ஆவார். முதன் முறையாக தற்பொழுது CTTFன் அனைத்து மூன்று பதவிகளும் இந்தியர்களால் வகிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்