TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

August 3 , 2019 1946 days 1227 0
  • உயர் கல்வி நிறுவனங்களுக்காக நாட்டின் முதலாவது மாநில அளவிலான அங்கீகார ஆணையமான மாநில மதிப்பீடு மற்றும் அங்கீகார மையமானது (State Assessment and Accreditation Centre - SAAC) கேரளாவில் செயல்படத் தொடங்கியுள்ளது.
    • அங்கீகாரத்திற்காக மாநிலம் சார்ந்த 3 குறிப்பிட்ட அளவுருக்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அவையாவன: அனைவரையும் உள்ளடக்கிய சமூகம், சமபங்கு உடைய, சிறப்பு வாய்ந்த மற்றும் அறிவியல் சார்ந்த மனநிலை & மதச் சார்பற்ற பார்வை ஆகியவற்றை வளர்ப்பதற்கான நடவடிக்கைகள்.
  • நாட்டில் இதே வகையைச் சேர்ந்த முதன்முறையாக அரசாங்கத்திடமிருந்து அனுமதி பெற்ற பின்பு விலங்குகளில் மனித உறுப்புகளை வளர்ப்பதற்கான ஆய்வைத் தொடங்க ஜப்பானைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் முயற்சி செய்து கொண்டிருக்கின்றனர்.
    • இவர்கள் அயல் சதையொட்டு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தவிருக்கின்றனர். அயல் சதையொட்டு அல்லது ஹெட்ரோலோகஸ் உறுப்பு மாற்று என்பது உயிரணுக்கள், திசுக்கள் அல்லது உறுப்புகளை ஒரு இனத்திலிருந்து மற்றொரு இனத்திற்கு மாற்றுவதாகும்.
  • கிரிராஜ் பிரசாத் குப்தா என்பவர் பொது கணக்குத் தணிக்கையாளராக (Controller General of Accounts - CGA)  நியமிக்கப்பட்டுள்ளார். இவரது நியமனம் 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 01 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
  • 23 வயதான இந்திய வம்சாவளி மருத்துவரான பாஷா முகர்ஜி என்பவருக்கு 2019 ஆம் ஆண்டின் மிஸ் இங்கிலாந்து என்ற பட்டம் சூட்டப்பட்டது.
  • மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த தினத்தை அனுசரிப்பதற்காக காம்பியாவில் உள்ள எபுன்ஜன் அரங்கில் மகாத்மா காந்தி மற்றும் காதி குறித்த கண்காட்சியை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தொடங்கி வைத்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்