ஜம்மு மற்றும் காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில் 43 நாட்கள் நடைபெறும் மச்செயில் மாதா யாத்திரையானது பாதுகாப்பு காரணங்கள் கருதி ரத்து செய்யப்பட்டது.
மச்செயில் மாதா என்பது இந்தியாவில் ஜம்முப்பிராந்தியத்தின் கிஷ்த்வார் மாவட்டத்தில் மச்செயில் என்னுமிடத்தில் அமைந்துள்ள துர்கா தேவி கடவுளின் சிலையாகும்.
பாங்காங்கில் நடைபெற்ற மீகாங் கங்கை ஒத்துழைப்பு அமைப்பின் 10-வது அமைச்சரவைக் கூட்டத்தில் வெளியுறவுத் துறை அமைச்சர் S.ஜெய்சங்கர் இந்த அமைப்பின் மற்ற உறுப்பினர் நாடுகளுக்கும் இந்தியாவிற்கும் இடையே சிறந்த இணைப்பை உருவாக்குவதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார்.
இது இந்தியாவையும், கம்போடியா, லாவோஸ், மியான்மர், தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகிய ஐந்து ஆசியான் நாடுகளையும் உள்ளடக்கிய ஒரு துணைப் பிராந்திய ஒத்துழைப்பு அமைப்பாகும்.
நமது சூரியக் குடும்பத்திலிருந்து 31 ஒளி வருடங்கள் தள்ளி இருக்கின்ற சூப்பர் பூமியைப் போன்ற GJ 357-d என்ற கிரகத்தை நாசாவின் வெளிக்கோள்களை ஆய்வு செய்ய சுற்றி வரும் செயற்கைக்கோள் கண்டுபிடித்து இருக்கின்றது.
பாங்காங்கில் நடைபெற்ற தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் ஆடவர் இரட்டையர் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி இருவரும் இணைந்து நடப்பு உலகச் சாம்பியன்களான லி ஜீன் ஹீயு மற்றும் லியு யுசென் இணையைத் தோற்கடித்து உலக சாதனை படைத்துள்ளனர்.