TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

August 10 , 2019 1939 days 1231 0
  • மணிப்பூர் அரசின் பசுமை மணிப்பூர் திட்டத்திற்கான பசுமைத் தூதராக அம்மாநிலத்தின் கக்சிங் மாவட்டத்தைச் சேர்ந்த 9 வயது நிரம்பிய “வேலன்டின் இலங்பாம்” என்ற சிறுமி நியமிக்கப்பட்டுள்ளார்.
    • இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு 2 குல்மொஹர் மரங்களை நட்டுள்ளார். சாலை விரிவாக்கப் பணிகளுக்காக இந்த மரங்கள் வெட்டப்பட்டன. அதனால் இந்தக் குழந்தை ஒரு முகநூல் இடுகையில் தேற்ற முடியாத அளவிற்கு அழுது கொண்டிருந்தது. இது குறித்து அம்மாநில முதலமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது.
  • பஞ்சாப்பின் அனந்தபூர் சாஹிப் நகரத்தில் உள்ள விராசத்-இ-கால்சா அருங்காட்சியகமானது ஒரே நாளில் ஆசியத் துணைக் கண்டத்தில் மிகவும் பார்வையிடப்பட்ட அருங்காட்சியமாக விளங்கியதற்காக விரைவில் ஆசிய சாதனை புத்தகத்தில் இடம் பெறவுள்ளது. 2019 ஆம் ஆண்டு மார்ச் 20 ஆம் தேதி மட்டும் 20,569 பார்வையாளர்கள் இந்த அருங்காட்சியகத்திற்கு வருகை தந்துள்ளனர்.
    • விராசத்-இ-கால்சா ஆனது பஞ்சாப் மற்றும் சீக்கிய மதத்தின் கலாச்சாரம் மற்றும் அதன் வரலாற்றை அனுசரிப்பதற்காக கட்டப்பட்டுள்ளது. இது 2011 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் திறக்கப்பட்டது.
  • கம்போடியாவிற்கான முன்னாள் அமெரிக்கத் தூதர் மற்றும் உலக உணவுப் பரிசு நிறுவனத்தின் தலைவரான கென்னத் எம். குயின் என்பவர் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன் விருதைப் பெற்றுள்ளார்.
  • 09-08-2019 அன்று ஜம்மு காஷ்மீரை இரண்டு ஒன்றியப் பிரதேசங்களாகப் பிரிப்பதற்கான மறுசீரமைப்புச் சட்டத்திற்கு இந்தியக் குடியரசுத் தலைவர் இராம்நாத் கோவிந்த் தனது ஒப்புதலை வழங்கினார்.
    • அக்டோபர் 31 ஆம் தேதியன்று ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய இரண்டு ஒன்றியப் பிரதேசங்களும் நடைமுறைக்கு வரும். இத்தினமானது சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த தினமாகும்.
  • 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 08 அன்று ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் நானாஜி தேஷ்முக் (இறப்பிற்குப் பின்பு), பூபேந்திர குமார் ஹசாரிகா (இறப்பிற்குப் பின்பு), பிரணாப் முகர்ஜி ஆகியோருக்கு இந்தியக் குடியரசுத் தலைவர் இராம்நாத் கோவிந்த் பாரத ரத்னா விருதினை வழங்கினார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்