ஆரம்பப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கணிதம் சார்ந்த கற்றல் திறனை மேம்படுத்துவதற்காக நிகழ்நேரத்தில் (ஆன்லைன்) தரவுகளை வழங்குவதில் கவனம் செலுத்தக் கூடிய ஒரு முன்னோடித் திட்டமான “மேட்டிபிக்” என்ற செயலியை தமிழ்நாடு மாநில கல்வித் துறை தொடங்கியுள்ளது.
“மேட்டிபிக்” ஆனது மாணவர்களின் கணிதம் சார்ந்த கற்றல் திறனின் முழுமையான வளர்ச்சிக்குப் பங்களிக்கக் கூடிய வகையில் கணக்குகளுக்குத் தீர்வு காணும் பணிகளில் அவர்களை ஈடுபடுத்துகின்றது.
காதி மற்றும் காதி தொழிற்துறை ஆணையம் (KVIC - Khadi and Village Industry Commission) 2019 ஆம் ஆண்டின் உலக பூர்வகுடி மக்கள் தினத்தின்போது (ஆகஸ்ட் 9) “தோல் திட்டம்” என்ற ஒன்றைத் தொடங்கியுள்ளது. இது இந்தியா முழுவதும் தோல் கைவினைஞர்களுக்குத் தோல் சார்ந்த பொருட்களை வழங்கவிருக்கின்றது.
இந்திய தேசிய அறிவியல் நிறுவனத்தின் முதலாவது பெண் தலைவராக சந்திரிமா சஹா பொறுப்பேற்கவுள்ளார். இவருடைய பதவிக் காலம் 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் தொடங்கவிருக்கின்றது.
இவர் இதற்கு முன்பு புது தில்லியில் உள்ள தேசிய நோய் தடுப்பியல் நிறுவனத்தின் இயக்குநராகப் பணியாற்றினார்.
இந்தியாவின் முதலாவது “சுகாதாரப் பற்று அட்டையானது” தனியார் துறை வங்கியான ஆர்பிஎல் மற்றும் டிஜிட்டல் சுகாதார நல பிராக்டோ தளம் ஆகிய நிறுவனங்களினால் தொடங்கப்பட்டுள்ளது. மருத்துவர்களுடனான நிகழ்நேர ஆலோசனைகள் மற்றும் இலவச சுகாதாரப் பரிசோதனை போன்றவற்றிற்காக இதைப் பயன்படுத்த முடியும்.
ஹைதராபாத் ஓபன் போட்டியில் இந்திய பேட்மின்டன் வீரரான சவ்ரப் வெர்மா ஆண்களுக்கான ஒற்றையர் பட்டத்தை வென்றுள்ளார். இவர் இறுதிப் போட்டியில் சிங்கப்பூரைச் சேர்ந்த லோஹ் கியான் யூவை வீழ்த்தினார்.
ஜார்ஜியாவின் திபிலீசியில் நடைபெற்ற கிராண்ட் பிரிக்ஸ் மல்யுத்தத் தொடரில் பஜ்ரங் புனியா 65 கிலோ எடைப் பிரிவில் ஈரானின் பெய்மன் பிப்யானி என்பவரை வீழ்த்தி, தனது நான்காவது தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.