தமிழ்நாடு முதலமைச்சரின் விரிவான சுகாதாரக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், “உடல் பருமன் அறுவை சிகிச்சையை” இணைத்துள்ள இந்தியாவின் முதலாவது மற்றும் ஒரே மாநிலம் தமிழ்நாடு ஆகும். இதன் மூலம் 100ற்கும் மேற்பட்ட பயனாளிகள் பயனடைந்துள்ளனர்.
மூன்று நாட்கள் நடைபெறக் கூடிய “உலக முதலீட்டாளர்கள் மாநாடானது” காஷ்மீரின் ஸ்ரீநகரில் அக்டோபர் 12 ஆம் தேதியிலிருந்து நடத்தப்படும் என்று இந்தியத் தொழிற்துறை கூட்டமைப்பு (CII - Confederation of Indian Industries) மற்றும் ஜம்மு காஷ்மீர் வர்த்தக ஊக்குவிப்பு அமைப்பு ஆகியவை அறிவித்துள்ளன.
ஒரு மாநிலத்தினால் பரிந்துரைக்கப்பட்டால் தேசிய சட்டப் பல்கலைக் கழகங்களைத் தவிர புதிய பல்கலைக் கழகங்களைத் திறப்பதற்கு “3 ஆண்டு கால தற்காலிகத் தடையை” இந்திய பார் கவுன்சில் (Bar Council of India - BCI) விதித்துள்ளது. சட்டக் கல்வியின் தரத்தை மேம்படுத்தும் நோக்கத்திற்காக இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
BCI என்பது இந்திய வழக்கறிஞர் குழுவை பிரதிநிதித்துவப் படுத்த மற்றும் ஒழுங்குபடுத்துவதற்காக 1961 ஆம் ஆண்டின் வழக்குரைஞர்களின் சட்டத்தின் கீழ் நாடாளுமன்றத்தால் உருவாக்கப்பட்ட ஒரு சட்டப்பூர்வ அமைப்பாகும்.
பசிபிக் தீவு நாடான பப்புவா நியூ கினியா ஆனது உலகில் அதிக எண்ணிக்கையிலான “வாழும்” (வழக்கத்தில் உள்ள) பூர்வகுடி மொழிகளைக் (840) கொண்டுள்ளது. இந்தியா 453 பூர்வகுடி மொழிகளுடன் 4வது இடத்தில் உள்ளது.
2019 ஆம் ஆண்டானது ஐக்கிய நாடுகளின் சர்வதேச பூர்வகுடி மொழிகள் ஆண்டாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
புது தில்லியில் நடைபெற்ற 2019 ஆம் ஆண்டின் உலக கல்வி மாநாட்டின் போது உயர் கல்வியில் தனது சாதனைகளுக்காக, “சிறந்த புத்தாக்கம் மற்றும் முன்னெடுப்பு ஆகியவற்றுக்கான தலைமைத்துவ விருதை” இராஜஸ்தான் மாநிலம் வென்றுள்ளது.
மொரீஷியஸில் நடைபெற்ற “மிஸ் உலக பன்முகத் தன்மை” என்ற ஒரு அழகிப் போட்டியில் இந்தியாவின் திருநங்கைப் பெண்மணியான நாஸ் ஜோஷி என்பவர் தொடர்ந்து மூன்றாவது முறையாக முடிசூட்டப்பட்டார்.
யாசின், பாலாபன் மற்றும் கயெம் என்ற துல்லியத் தன்மை கொண்ட வானிலிருந்து வான் இலக்கைத் தாக்கி அழிக்கும் 3 வழிகாட்டு ஏவுகணைகளை ஈரான் வெளியிட்டுள்ளது.
ஐக்கிய இராஜ்ஜியத்தின் லீட்ஸ் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் 0.47 நானோமீட்டர் (மீ நுண்ணளவு) அளவு கொண்ட மெல்லிய தங்கத்தை உருவாக்கியுள்ளனர். இது 2 அணுக்களைக் கொண்டு உருவாக்கப்பட்டதன் காரணமாக இது ஒரு இரு பரிமாணப் பொருளாகும்.