TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

August 16 , 2019 1801 days 903 0
  • இந்த சுதந்திர தினத்திலிருந்து “தனியார் தொலைக்காட்சி அலைவரிசை நிகழ்ச்சிகளில்” மாற்றுத் திறனாளி நபர்களுக்கான அணுகல் தரங்களை செயல்படுத்த மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
    • முதல் கட்டமாக, அந்தந்த மொழிகளுக்குரிய சைகை மொழி விளக்கத்துடன் சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் குறித்த ஒரு குறுகிய நிகழ்ச்சியை ஒளிபரப்புமாறு தனியார் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
  • பிரான்சு அரசினால் புகழ்பெற்ற “செவாலியர் டி ஐ ஓர்டிரி டியு மெரிட்டி அக்ரிகோலிட்டோ” என்ற விருது வழங்கப்பட்ட முதலாவது இந்திய சமையல்காரராக மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பிரியம் சட்டர்ஜி என்பவர் உருவெடுத்துள்ளார்.
    • இவர் வங்காள உணவுகளிலிருந்து பிரெஞ்சு உணவு வகைகளைத் தயாரிப்பதில் புகழ் பெற்றவராக திகழ்கின்றார்.
  • குடிமக்களின் வீடுகளுக்கே சென்று அரசு சேவைகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட “கிராமத் தன்னார்வலர்கள் அமைப்பு” என்ற ஒரு புதிய திட்டத்தை ஆந்திரப் பிரதேச அரசு அறிவித்துள்ளது.
  • ஹர்சத் பாண்டுரங் தாகூர் என்பவர் தேசிய சுகாதார மற்றும் குடும்ப நல நிறுவனத்தின் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனமானது பிரதம மந்திரியின் தலைமையிலான நியமனங்களுக்கான அமைச்சரவைக் குழுவினால் மேற்கொள்ளப்பட்டது.
  • அசாமின் மலைப் பகுதியைச் சார்ந்த திகோம் தேயிலை தோட்டத்தைச் சேர்ந்த “தங்கப் பட்டாம்பூச்சி” என்ற பெயர் கொண்ட ஒரு அரிய வகைத் தேயிலையானது குவஹாத்தி தேயிலை ஏல மையத்தில் ஒரு கிலோ ரூ.75,000ற்கு ஏலம் விடப்பட்டு ஒரு புதிய சாதனையைப் படைத்துள்ளது.
  • 2019 ஆம் ஆண்டின் சுதந்திர தினத்தை அனுசரிப்பதற்காக புது தில்லியில் வாட்டன் என்ற தலைப்பு கொண்ட ஒரு தேசபக்திப் பாடலை மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர் வெளியிட்டார்.
    • சுதந்திர தினத்திற்கான இந்தச் சிறப்புப் பாடலானது பொதுச் சேவை ஒளிபரப்பு நிறுவனமான தூர்தர்ஷன் மற்றும் பிரசார் பாரதி ஆகியவற்றினால் தயாரிக்கப்பட்டது.
  • ஆண் மற்றும் பெண் என்ற இரு பிரிவுகளிலும் சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 100 விக்கெட்டுகள் எடுத்த மற்றும் 1000 ரன்களைக் குவித்த முதலாவது கிரிக்கெட் வீரராக ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆல்ரவுண்டரான எலிசி பெரி என்பவர் உருவெடுத்துள்ளார்.
  • “QS சிறந்த மாணவ நகரங்கள் தரவரிசையானது” சர்வதேச கல்வி ஆலோசக நிறுவனமான QS குவக்ரேலி சைமண்ட்ஸ் என்ற நிறுவனத்தினால் தொகுக்கப்பட்டது. தொடர்ந்து இரண்டாவது முறையாக மாணவர்களுக்கான உலகின் சிறந்த நகரமாக “இலண்டன்” நகரம் விளங்குகின்றது. இதற்கு அடுத்து டோக்கியோ மற்றும் மெல்பெர்ன் ஆகிய நகரங்கள் உள்ளன.
    • இந்தியாவில் சிறந்த மாணவர் நகரமாக பெங்களூரு நகரம் (81வது இடம்) தரவரிசைப் படுத்தப்பட்டுள்ளது.
  • ஆகஸ்ட் 14 அன்று உலக பல்லிகள் தினம் அனுசரிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்