TNPSC Thervupettagam

ஊதியங்கள் மீதான சட்டம்

August 6 , 2019 1811 days 1821 0
  • 2019 ஆம் ஆண்டின் ஊதியங்கள் மீதான சட்டத்தை நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது.
  • இது எந்தவொரு தொழிலகம், வர்த்தகம், தொழில்கள் அல்லது உற்பத்தி மேற்கொள்ளப்படும் அனைத்துப் பணிகளிலும் ஊதியம் மற்றும் ஊக்கத் தொகை பண வழங்கீடுகளை ஒழுங்குபடுத்த முயல்கிறது.
  • இந்தச் சட்டமானது  அனைத்து ஊழியர்களுக்கும் பொருந்தும்.
  • ரயில்வே, சுரங்கங்கள் மற்றும் எண்ணெய் வயல்கள் போன்ற பணிகளுக்கான ஊதியம் தொடர்பான முடிவுகளை  மத்திய அரசு  எடுக்கும்.
  • மற்ற அனைத்துப்  பணிகளுக்கும் மாநில அரசுகள் முடிவுகளை எடுக்கும்.
  • இந்த சட்டமானது பின்வரும் 4 சட்டங்களை பதிலீடு செய்து மாற்றுகின்றது.
    • ஊதிய பண வழங்கீட்டுச் சட்டம் - 1936
    • குறைந்த பட்ச ஊதியச் சட்டம் - 1948
    • ஊக்கத் தொகை பணவழங்கீட்டுச் சட்டம் - 1965
    • சம ஊதியச் சட்டம் - 1976

அடிப்படை ஊதியம்

  • தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தின் அடிப்படையில் மத்திய அரசானது ஒரு அடிப்படை ஊதியத்தை நிர்ணயிக்கும்.
  • மத்திய அரசு அல்லது மாநில அரசுகள் நிர்ணயிக்கும் குறைந்தபட்ச ஊதியமானது இந்த அடிப்படை ஊதியத்தை விட அதிகமாக இருத்தல் வேண்டும்.

குறைந்தபட்ச ஊதியம்

  • முதலாளிகள் குறைந்தபட்ச ஊதியத்தை விட குறைவாக ஊதியம் வழங்குவதை இந்தச் சட்டம் தடை செய்கிறது.
  • குறைந்தபட்ச ஊதியமானது மத்திய அல்லது மாநில அரசுகளால் பின்வருவனவற்றின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படும்.
    • தொழிலாளர்களின் திறன்
    • பணியின் கடினத் தன்மை

கூடுதல் வேலை நேரம்

  • பணியாளர்கள் அவர்களின்  நிர்ணயிக்கப்பட்ட பணி நேரத்தை விட அதிகமாக பணி புரிந்தால் அவர்களுக்கு கூடுதல் நேர ஊதியம் கிடைக்கும்.
  • இந்த கூடுதல் நேர ஊதியமானது சாதாரண ஊதிய விகிதத்தை விட குறைந்தது இரு மடங்கு அதிகமாக இருத்தல் வேண்டும்.

ஊக்கத் தொகை நிர்ணயம்

  • ஊக்கத் தொகையானது ஒரு பணியாளரின் ஊதியத்தில் குறைந்தபட்சம் 8.33% ஆக இருக்கும்.
  • ஒரு பணியாளர் தனது வருடாந்திர ஊதியத்தில் 20% தொகையை அதிக பட்சமாக ஊக்கத் தொகையாகப் பெறலாம்.

ஆலோசனைக் குழுக்கள்

  • பின்வரும் விவகாரங்கள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து அந்தந்த அரசுகளுக்கு ஆலோசனை வழங்குவதற்காக மத்திய மற்றும் மாநில அரசுகளானது ஆலோசனைக் குழுக்களை அமைக்கும்.
    • குறைந்தபட்ச ஊதியங்களை நிர்ணயித்தல்
    • பெண்களுக்கு வேலைவாய்ப்புகளை அதிகரித்தல்

பாலினப் பாகுபாடு

  • இது ஊதியம் மற்றும் ஒரே மாதிரியான வேலை அல்லது ஒரே வேலைகளுக்குப் பணியாளர்களை நியமிப்பது தொடர்பான விவகாரங்களில் பாலினப் பாகுபாட்டை தடை செய்கிறது.

முதலாளிகளுக்கு அபராதம்

  • உரிய ஊதியத்தை விட குறைவாக வழங்குதல் அல்லது சட்டத்தின் எந்தவொரு விதிமுறைகளையும் மீறுதல் போன்ற முதலாளிகளால் செய்யப்படும் குற்றங்களுக்கான அபராதங்களை இந்தச் சட்டம் குறிப்பிட்டுள்ளது.
  • இதற்கு அதிகபட்சமாக 3 மாத சிறைத் தண்டனையும் ஒரு லட்சம் ரூபாய் வரையிலான அபராதமும் விதிக்கப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்